Kalki 2898 AD படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கபடும் பிரம்மாண்ட படமாக அமைவதில் ஆச்சரியம் இல்லை. தெலுங்கில் எடுக்கப்படும் படம், 2898 AD என்ற ஆண்டில் எதிர்காலத்தில் உலகத்தின் மற்றொரு பார்வையில் தொழில்நுட்ப மேம்பாட்டின் உச்சத்தில் உருவாகும் படம். இதிகாச கதைகளையும், வரலாற்று பாத்திரங்களையும் சேர்த்து உருவாக்கிய படமாக அமைந்துள்ளது.
𝐓𝐇𝐄 𝐁𝐀𝐓𝐓𝐋𝐄 𝐁𝐄𝐆𝐈𝐍𝐒 𝐍𝐎𝐖 💥
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 10, 2024
Presenting #Kalki2898ADTrailer to you all!
– https://t.co/hLRQqSAnkm
#Kalki2898AD @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal… pic.twitter.com/zLm7fcj4fF
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கதாப்பாத்திரத்தை வீடியோ வழியாக வெளியிட்டனர். மகாபாரதத்தில் வரும் குரு துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் பாத்திரத்தில் கணக் கச்சிதமாக நடித்துள்ளார். நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், தீஷா பாட்னி, கமல் ஹாசன் என பெரிய நடிகர்கள் நடிப்பில் கல்கி சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக அமைகிறது.

காசி நகரத்தில் எதிர்காலத்தில் மிரட்டலான தொழில்நுட்ப வளர்ச்சியில், தண்ணீர் பஞ்சமும் மனிதர்களே மனிதர்களை ஆளும் கொடிய காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு Kalki 2898 AD படத்தை எடுத்துள்ளார் நாக் அஸ்வின். தீபிகா படுகோன் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் தெரிகிறது. டிரெய்லரில் பிரம்மாண்டமான காட்சிகளுடன் அதற்கு ஏற்ப சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

பிரபாஸின் கதாப்பாத்திரம் வீரமான ஒரு தோற்றமாக தெரிகிறது. டிரெய்லரில் உடன் தீஷா பாட்னி, ஷோபனா, ஆனா பென், பசுபதி விரைவாக காட்டப்பட்டனர். உலக நாயகன் கமல் ஹாசனின் பாத்திரம் முற்றிலும் வித்தியாசமான, முதிர்ந்த தோற்றத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆபரேஷன் K என்னவென்று இதற்கு முன் வந்த அப்டேட்டில் கேள்வியாக இருந்தது. K என்பது விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியை குறிக்கும் என்றும், அந்த குழந்தையை காப்பாற்ற தான் அமிதாப் பச்சனின் பாத்திரமான அஸ்வத்தாமன் மற்றும் பலர் போராடுவதாகவும் படம் அமையலாம்.
இந்த அனைத்து கேள்விகளுக்கும், அனுமானத்துக்கும் விடை ஜூன் 27ம் தேதி Kalki 2898 AD படம் வெளியாகும் போது தெரியவரும். படத்தின் டிரெய்லரை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]