Home Cinema News Kalki 2898 AD படம் 500 கோடி வசூல் சாதனை! 

Kalki 2898 AD படம் 500 கோடி வசூல் சாதனை! 

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான Kalki 2898 AD படம் ப்ளாக் பஸ்டர் வசூல் செய்துள்ளது.

by Vinodhini Kumar

Kalki 2898 AD  படம் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன்- ஆக்ஷன் படமாகும். நாக் அஸ்வின் இயக்கத்தில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், ஜூன் 27 வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான Kalki 2898 AD 500 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

Kalki 2898 AD blockbuster poster

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், தெலுங்கு நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன் என முன்னணி நடிகர்கள் நடித்த Kalki 2898 AD, துவாபர யுகத்தின் முடிவில் படம் தொடங்கி கலியுகத்தின் முடிவில் கிருஷ்ணரின் கடைசி அவதாரமான ‘கல்கி’யின் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். 

தொழில்நுட்ப பரிமானத்தின் மாபெரும் வளர்ச்சியால் உலகின் அனைத்து இயற்க்கை வளங்களும் அழிந்து, தண்ணீர், காற்று என அனைத்தும் மாசுபட்டு இருக்கும். இந்த கலியுகத்தை முடிவுக்கு கொண்டு வர, கல்கி அவதாரத்தில் ஒரு குழந்தை பிறக்கும். அதை தடுக்க நினைக்கும் ஒரு பிரிவினர், அந்த குழந்தையை காப்பாற்ற பாரதப் போரில் இருந்து காத்திருக்கும் அஸ்வத்தாமன் பாத்திரம் என கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் கதையை மாபெரும் பட்ஜெட்டில் உருவாகியது. 

Kalki 2898 AD movie poster

சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை கருத்தில் கொண்டு படத்தில் பல இடங்களில் உணர்வுகள் குறைந்தாலும் இந்தியாவில் ஹாலிவுட் தரத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்டு வெளியான கல்கி 2898 AD படம் தியேட்டர் ஆடியன்ஸால் கொண்டாடப்பட்டது. வெளியான 5 நாட்களில் 500 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.