Home Cinema News Kalki 2898 AD படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியது! 

Kalki 2898 AD படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியது! 

Kalki 2898 AD படம் ஜூன் 27 வெளியாக உள்ளது. அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 

by Vinodhini Kumar
KALKI 2898 AD trailer poster

Kalki 2898 AD படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. படத்தின் பிரம்மாண்ட BTS காட்சிகள், அதில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் என அனைத்தையும் விலக்கி வீடியோ பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்தனர். 

Amitabh Bachchan in Kalki

10ம் தேதி வந்த​ டிரெய்லரைப் போல​, இன்று Kalki 2898 AD படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினர். முதல் காட்சியில் அமிதாப் பச்சன் ‘அஸ்வத்தாமன்’ வேடத்தில் தோன்றுகிறார். முதல் டீஸரில் அறிமுகப்படுத்தாத கதாப்பாத்திரங்களை இதில் சேர்த்தனர். 

சந்தோஷ் நாராயணனின் விருவிருப்பான பின்னணி இசை, பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் இடையே பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளுக்கு மேலும் வழு சேர்த்துள்ளது. படத்தில் உள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் கற்பனையான எதிர்கால Dystopian உலகத்தை கண் முன் நிறுத்துகிறது. 

Deepika Padukone in Kalki

தீபிகா படுகோன் உடைய பாத்திரத்தின் முக்கியத்துவத்தை மறுபடியும் குறிக்கும் காட்சியும், அஸ்வத்தாமன் பாத்திரத்தின் பங்கு படத்தின் துடுப்பாக அமைவதும் தெளிவாக தெரிகிறது. எண்ணிப்பார்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியை நிஜமாக உருவாக்கி அதை ரசிக்கும் வகையில் படத்தில் CGI நுட்பத்தால் சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது. கமல் ஹாசனின் சுப்ரீம் யாஸ்கின் பாத்திரத்தின் சிலிர்க்க வைக்கும் வசனங்களும் தோற்றமும் படத்தில் எதிர்நோக்க நிறைய இருப்பதாக நினைக்க வைக்கிறது. 

Shobana in Kalki

இன்னும் பல கதாப்பாத்திரங்களும் அவர்களின் பங்கீடும் என்னவென்று தெரிய ஆர்வமாக இருக்கிறது. பசுபதி, ஷோபனா, ஆனா பென் என சிலரின் கதாப்பாத்திர போஸ்டர்களை மட்டும் வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆவலாக உள்ளது. அவர்களால் படத்தில் மாற்றம் உண்டாகுமா? வரலாற்று கதைக்களத்தில் ஏதேனும் மாற்றம் உண்டாகுமா? இதற்கான பதில்கள் ஜூன் 27, படம் வெளியாகும் போது தெரியவரும். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.