Home Cinema News Kalki 2898 AD ‘தீம் ஆஃப் கல்கி’ பாடல் வீடியோ விரைவில் வெளியாகும்! 

Kalki 2898 AD ‘தீம் ஆஃப் கல்கி’ பாடல் வீடியோ விரைவில் வெளியாகும்! 

Kalki 2898 AD படத்தின் முக்கிய பாடல் வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இதை மதுராவில் வெளியிட்டது படக்குழு. 

by Vinodhini Kumar

Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் முக்கிய பாடலான ‘தீம் ஆஃப் கல்கி’ விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது படக்குழு. இந்த பாடல் படத்தின் கதைக்கு ஏற்ற மாதிரி கிருஷ்ணர் பிறந்த இடமாக சொல்லப்படும் மதுராவில் நடன நிகழ்ச்சியாக வெளியிட உள்ளனர். 

இந்த நடன நிகழ்ச்சியை Kalki 2898 AD படத்தில் நடிக்கும் நடிகை ஷோபனா நிகழ்த்தியுள்ளார். பரதநாட்டிய நிகழ்ச்சியாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். படத்தின் கதை விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பொருத்தது என்பதால் கிருஷ்ணர் பிறந்த இடம் என கூறப்படும் மதுராவில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவை படத்தின் தயாரிப்பாளர்கள் வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். 

Kalki 2898 AD song unveiling
Source: Vyjayanthi Movies

Kalki 2898 AD ரிலீஸ் தேதி

Kalki படத்தின் திகைப்பூட்டும் இசை சந்தோஷ் நாராயணன், டிரெய்லர் மற்றும் மற்ற வீடியோக்களில் அவரின் பின்னணி இசை சிலிர்க்க வைத்தது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், கமல் ஹாசன் என பலர் நடித்துள்ளார்கள். இந்த​ படம் வரும் ஜூன் 27, வியாழன் வெளியாக உள்ள நிலையில் தினம் ஒரு அப்டேட் கொடுத்து எதிர்பார்ப்பை தூண்டுகிறது படக்குழு. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.