Kamal–ன் நடிப்பு ஒவ்வொரு படத்திற்கு படம் வித்தியாசமாக இருக்கும் என்பதற்கு சான்றாக தெனாலி படத்தில் பேச்சு, நடை, உடை என அனைத்திலும் வேறுபாட்டை காட்டியுள்ளார்.
அமெரிக்க படமான “what is Bob” என்ற படத்தின் கதையை கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் தெனாலி. தெனாலி 2000-ஆம் ஆண்டில் KS ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் மூலம் வெளியானது. வசனம் கிரேஸி மோகன் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். Kamal மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடிப்பில் அசத்தியிருப்பார். ஜெயராம், ஜோதிகா,தேவயாணி, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, சார்லி, மதன் பாப் ஆகியோர் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் தமிழ் நாடு அரசு விருது, சிறந்த இயக்குனருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மூலம் மனதளவில் பாதிக்கப்பட்ட கமல் இலங்கையில் இருந்து டிரீட்மென்ட் எடுப்பதற்காக சென்னையில் உள்ள டெல்லி கணேஷ் இடம் செல்கிறார். அப்போது அவரை விட பெரிய மனநல மருத்துவராக ஜெய்ராம் இருந்து வருகிறார். ஜெயராமை பலி வாங்க கமலை ஜெய்ராமிடம் அனுப்புகிறார் டெல்லி கணேஷ்.

ஜெயராமை சந்தித்த கமல் ஒரு சில விசயத்திற்கு பயம் என தனது பிரச்சனையை கூறுகிறார். டிரீட்மென்ட் செய்ய ஒரு மாதம் ஆகும் எனவும் கூறி கமலை மறுபடி வர சொல்கிறார் ஜெய்ராம். இதை அறிந்த டெல்லி கணேஷ் ஜெய்ராம் விடுமுறையில் கொடைக்கானல் சென்றுள்ளதை கமலிடம் கூறி டிரீட்மென்ட் கொடைக்கானலில் எடுத்துக்கொள் என அனுப்பி விடுகிறார்.
குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ள ஜெய்ராம் கமலை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார். கமலை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என ஜெயராமும், கமலை இங்கேயே இருக்க வைக்க வேண்டும் என டெல்லி கணேஷம் செய்யும் செயல்கள் ரசிக்க வைக்கும்.
குடும்பத்துடன் இருக்கும் ஜெய்ராம் உடன் கமல் தங்கி விடுகிறார். தேவயானி, ஜோதிகா ஆகியோர் கமலின் அப்பாவி தனத்தை பார்த்து இருவருக்கும் பிடித்து விடுகிறது. அவருக்கு உதவி செய்து அவரை சரி செய்ய வேண்டும் என ஜெய்ராமிடன் கூறுகின்றனர். அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துருப்பார் ரவிக்குமார்.
தனக்கு ஒரு சில விஷயங்களில் பயமாக இருக்கும் என கூறும் போது கமலின் எதார்த்த பேச்சும், நடிப்பும் ரசிக்க வைத்திருக்கும். கிளைமேக்ஸ் காட்சியில் கமல் இலங்கையில் தனக்கு நடந்த கொடுமைகளை கூறும் போது அனைவரையும் அழவைத்து விடும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அதில் வரும் ஒரு சில காட்சிகள் கொடைக்கானலில் குளிர் நிறைந்த இடத்தில எடுத்ததால் சூட்டிங்கின் போது நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கமலின் எதார்த்தமான பேச்சு, கமலிடமிருந்து தப்பிக்க ஜெயராம் செய்யும் செயல் என ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தது.
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் முதல் முறை பார்ப்பது போல காமெடி, நடிப்பு என படத்தில் அனைவரும் சிறப்பான எதார்த்த நடிப்பில் கலக்கியிருந்தனர்.
நடிப்பை தனது உயிர் மூச்சாக கொண்டு நடித்து வரும் Kamal ஒரு படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார். அதே போல தான் தெனாலி படத்திலும் இலங்கை தமிழில் பேசும் பேச்சும், கள்ளங்கபடமில்லாத நபரை போல நடித்த நடிப்பும் யாராலும் இவருக்கு இணையாக நடிக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து காட்டினார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]