Home Cinema News கமல்ஹாசனே இல்லாமல் நடந்த கமல்ஹாசன் பட ஷூட்டிங்… 60 நாள் கால்ஷீட் கொடுத்த சிம்பு! Thug life பட சுவாரஸ்யங்கள்!

கமல்ஹாசனே இல்லாமல் நடந்த கமல்ஹாசன் பட ஷூட்டிங்… 60 நாள் கால்ஷீட் கொடுத்த சிம்பு! Thug life பட சுவாரஸ்யங்கள்!

Simbu இன்று ThugLife படப்பிடிப்பில் இணைந்தார்!! இப்போது ராஜஸ்தான் ஜெய்சால்மரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

by Santhiya Lakshmi

மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் தமிழ்சினிமாவின் பொக்கிஷமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஆனால், இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்தப்பிறகு மணிரத்னமும், கமல்ஹாசனும் சேர்ந்து சினிமாவில் பயணிக்கவேயில்லை. இதனால் மணிரத்னமும், கமல்ஹாசனும் மீண்டும் எப்போது ஒன்றுசேர்வார்கள் என்கிற கேள்வி கோலிவுட்டில் பல ஆண்டுகளாகவே சுற்றிச்சுழன்று கொண்டிருந்தது. இந்தக் கேள்விக்கு விடையாக கிட்டத்தட்ட 37 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸில் கமல்ஹாசன் நடிக்க, மணிரத்னம் படம் இயக்கப்போவதாகவும், படத்தின் பெயர் ‘Thug life’  என்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாடமாக அறிவிக்கப்பட்டது.

WhatsApp Image 2024 04 22 at 6.57.09 AM 2

ஆறுமாதமாக நடந்த படத்தி ப்ரீப்ரொடக்‌ஷன் பணிகள் டிசம்பரில் முடிய, ஜனவரி மாதம் தக்லைஃப் படத்தின் ஷுட்டிங் சென்னையில் ஆரம்பமானது. ஒரு வாரம் மட்டுமே சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் செர்பியாவில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் முக்கியமான சுவாரஸ்யமே கமல்ஹாசனே இல்லாமல் கமல்ஹாசனுக்குப் பதில் டூப் போடப்பட்டு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

‘Thuglife’ படத்தின் ஷூட்டிங் செர்பியாவில் நடந்துகொண்டிருந்தபோது, கமல்ஹாசன் இங்கே தேர்தல் பிரசாரத்தில் பயங்கர பிசியாக இருந்தார். செர்பியாவில் மணிரத்னம் ஷூட் செய்த அந்த சண்டைக்காட்சியில் கமல்ஹாசனுக்கான க்ளோஸ் அப் காட்சிகள் மட்டும் விரைவில் சென்னையில், செர்பியாவில் நடப்பதுபோன்று படமாக்கப்பட இருக்கின்றன.

‘Thuglife’ படத்தில் சிம்பு, ஜெயம்ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக் எனப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது. இந்தப் படப்பிடிப்பின் அடுத்தக்கட்டமாக சிம்பு, கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகள் நேற்று டெல்லி அருகே ஜெய்சல்மாரில் தொடங்கியது. நேற்று சிம்புவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இன்று கமல்ஹாசன் ஷூட்டிங்கில் இணைகிறார். ‘Thuglife’ படத்துக்காக சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால், கமல்ஹாசனுக்கு இணையான கதாபாத்திரமாகவும், படம் முழுக்க கமல்ஹாசனோடு சிம்பு பயணிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் சிம்பு ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

‘Thug Life’ல் இணையும் Simbu- போஸ்டர் வெளியிட்டது படக்குழு! 

‘Thuglife’ படம் இந்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.