Home Cinema News ‘Indian-2’ பிராமாண்ட ஆடியோ வெளியீட்டு விழா!!

‘Indian-2’ பிராமாண்ட ஆடியோ வெளியீட்டு விழா!!

ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளாக நடந்துவந்த ‘Indian-2’ பட வேலைகள் முழுவதுமாக முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

by Santhiya Lakshmi

ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளாக நடந்துவந்த ‘Indian-2’ பட வேலைகள் முழுவதுமாக முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. 5 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்ததால் ஏகப்பட்ட ஃபுட்டேஜ்கள் எடுக்கப்பட்டதால் இதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருக்கிறது லைகா தயாரிப்பு நிறுவனம். ‘Indian-2’ பட ரிலீஸின்போதே ‘Indian-3’ படத்துக்கான டீசரும் வெளியாகும் என்கிறார்கள்.

‘Indian-2’ ஜூலை மாதம் 12-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகயிருக்கும் நிலையில் இந்தப்படத்துக்கான இசைவெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. படத்துக்கு அனிருத் இசைமையமைத்திருக்கும் நிலையில் ‘’பாரா’’ என்கிற பாடல் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.

GLHmLuDWAAEGGyF

‘Indian-2’ இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மு.க. ஸ்டாலினும் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் ‘Indian-2’ படத்தை கலைஞர் டிவி வாங்கியிருப்பதோடு, இந்தப்படத்துக்கான ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியிருக்கிறது.

இசைவெளியீட்டு விழாவில் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கிவருவதால் சிரஞ்சீவியும், ராம் சரணும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதேப்போல் இந்தி சினிமாவில் இருந்து ரன்வீர் சிங், மலையாள சினிமா சார்பாக மோகன் லால், இயக்குநர் மணிரத்னம் எனப்பலரும் ‘Indian-2’ இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்கள். 

‘Indian-2’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் மே 29-ம் தேதி வெளியாகயிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.