Home Cinema News தாத்தா வராரு… தாத்தா வராரு… 7 ஆண்டுகளுக்கு காத்திருப்புக்குப்பின் ரிலீஸுக்குத் தயாராகும் Indian 2

தாத்தா வராரு… தாத்தா வராரு… 7 ஆண்டுகளுக்கு காத்திருப்புக்குப்பின் ரிலீஸுக்குத் தயாராகும் Indian 2

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருக்கும் Indian 2 படம் வருகிற ஜூன் மாதம் 13-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

by John Kamalesh

2017-ம் பிக்பாஸ் சீசன் 1 இறுதிநாளின்போது Indian 2 படத்தை ஷங்கர் இயக்கப்போவதாகவும், தான் அதில் நடிக்கப்போவதாகவும் அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். முதலில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பதாக இருந்ததது. ஆனால், கருத்துவேறுபாடுகள் காரணமாக தில் ராஜு விலக, லைகா இந்தியன் 2 படத்தை கையில் எடுத்தது. 

கமல்ஹாசனுடன், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்தியன் 2-வில் நடித்திருக்கிறார். கொரோனா சூழலின்போது மறைந்த நடிகர் விவேக் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் படம் இந்தியன் 2 தான். 

WhatsApp Image 2024 04 26 at 5.41.31 AM

2019-ல் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா லாக்டெளனுக்கு முன்பாக  இவிபி-யில் நடந்த ஷூட்டிங்கில் மூன்று பேர் உயிரிழக்க, கமல்ஹாசன், ஷங்கர், லைகா என மூவருக்கும் இடையே மீண்டும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரனே சென்னை வந்து உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்து பிரச்சனையை சுமூகமாக்க, படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் கொரோனா லாக்டெளனால் உலகமே முடங்கியது. இதற்கிடையே ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கப்போக, மீண்டும் பலகட்ட சமரசங்களுக்குப்பிறகு இந்தியன் 2 இயக்கவந்தார். கமல்ஹாசனும் ‘விக்ரம்’ வெற்றிக்குப்பிறகு உற்சாகம் பெற இந்தியன் -2 படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டது. 

ஷங்கர் படம் என்றாலே கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கும். அதனால் இப்போது கிராஃபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. 

ஜூன் மாத இறுதியில் படம் ரிலீஸுக்கு வர இருக்கிறது. இதற்கு முன்பாக தற்போது தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட் ஹிட் அடித்திருப்பதால் மே மாத இறுதியில் 1996-ல் வெளியான ‘இந்தியன்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ரசிகர்களை மனதளவில் இந்தியன் படத்தி  கதை என்ன என்பதை தயார்படுத்திவிட்டு இந்தியன் – 2 படத்தை ரிலீஸ் செய்யலாம் என்கிற திட்டம்.

ரிலீஸுக்கு முன்பாக இன்னும் சில நாட்களில் அனிருத் இசையமைப்பில் ”தாத்தா வராரு… தாத்தா வராரு” என்கிற இந்தியன் 2 படப்பாடல் வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் சித்தார்த்தும், பிரியா பவானி சங்கரும் ஆடியிருக்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.