Home Cinema News Indian Cinema-விற்கு உலகநாயகன் அறிமுகப்படுத்திய “Technologies”

Indian Cinema-விற்கு உலகநாயகன் அறிமுகப்படுத்திய “Technologies”

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பு மட்டும் அல்ல சினிமா மீது கொண்ட தீராக் காதலால் Indian Cinema-விற்கு பல புது விதமான “Technologies”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.

by Shanmuga Lakshmi

நடிப்பு, கதை, திரைக்கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர், மேக்கப் ஆர்டிஸ்ட், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என உலகநாயகன் கமல்ஹாசன் கால் பதிக்காத துறை சினிமாவில் இல்லை என்று கூறலாம். லட்சம் கோடி ரசிகர்கள் அவரின் திறமையை கண்டு வியக்கும் தருணம் உலகம் உள்ளவரை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். Indian Cinema-வை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியோடு இருந்த உலக நாயகன், அவர் நடித்த பல திரைப்படங்களின் வாயிலாக உயர்தர தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். அதில் முதலாவதாக அறிமுகப்படுத்திய தொழில்நுட்பம் 1992. 

Magic Movie Software – தேவர் மகன் (1992)

தேவர் மகன்
Source Image:@ikamalhaasan(Instagram)

1992-ல் வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படத்தின் வாயிலாக “Magic Movie Software” என்ற திரைக்கதை எழுதும் தொழில்நுட்பத்தை Indian Cinema-விற்கு அறிமுகம் செய்தார். அதுவரை திரைக்கதையை காகிதத்தில் எழுதப்படும் அல்லது அச்சடிக்கப்பட்டும் வந்தது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் முதல் முறையாக திரைக்கதை டிஜிட்டல் முறையில் எழுதப்பட்டது. இயக்குனர் பரதன் அவர்கள் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, தயாரித்த ‘தேவர் மகன்’ திரைப்படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. Oscar விருதுக்கு இந்த திரைப்படம் அனுப்பப்பட்டது. இந்தப் படத்தின் திரைக்கதை, கதை கரு மற்றும் இசைஞானியின் இசை திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் பங்கு மிகப்பெரிய பலமாக இந்த திரைப்படத்திற்கு அமைந்தது. ‘தேவர் மகன்’ திரைப்படம் ஹிந்தியில் ‘விராசத்’ (1997), கன்னடத்தில் ‘தந்தகே தக்க மகா’ (2006) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. 

Avid Editing Software – மகாநதி (1994)

உலக நாயகன் கதை எழுதி, திரைக்கதையை ரா.கி. ரங்கராஜன் அவர்களுடன் இணைந்து எழுதிய “மகாநதி” திரைப்படம் 1994 ஆம் ஆண்டு நடிகர் சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளியானது. Avid Editing Software என்ற திரைப்படத்தை தொகுப்பாக்கம் செய்யும் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட முதல் திரைப்படம் “மகாநதி” ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகை சுகன்யா, எஸ்.என். லக்ஷ்மி, துளசி, ஷோபனா விக்னேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றது. “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்ற மகாகவி பாரதியாரின் கிளர்ச்சி பொங்கும் வரிகள் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சி இன்றளவும் சினிமா ரசிகர்கள் மனதில் ஓங்கி ஒலிக்கும் வரிகளாக இருந்து வருகிறது.

Kamal Haasan-ன் சரித்திர படைப்பு அபூர்வ சகோதரர்கள்!

Motion Control Rig – ஆளவந்தான் (2001)

2001 இல் ஆக்சன் திரில்லர் படமாக வெளியான ஆளவந்தான் திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் எழுதி 1984-ல் வெளியிட்ட ‘தாயம்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். Motion Control Rig என்ற ரோபோட்டிக் கேமரா தொழில்நுட்பம் முதல் முறையாக Indian Cinema-விற்கு ஆளவந்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வளவு நீளமான அல்லது குறுகிய காட்சியாக இருந்தாலும் தேவையான துல்லியத்தையும், பல்துறை திறனையும் இந்த கேமரா வழங்கும். ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலக நாயகன் இரட்டை வேடத்தில் நடித்ததால் இந்த கேமராவை பயன்படுத்தி நீண்ட காட்சியில் இரு கதாபாத்திரங்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது உபயோகப்படுத்தப்பட்டது. வெளியான வருடத்தில் இந்த திரைப்படத்திற்கு பெரிதான அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் சில வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தை”Cult Classic” படமாக ரசிகர்களும் சினிமா கலைஞர்களும் கொண்டாடி வருகின்றனர். 

Dolby Stereo Surround SR Technology – குருதிப்புனல் (1995)

ஒரு திரைப்படத்தில் ஐந்து முதல் பத்து பாடல்கள் இருந்த காலகட்டத்தில், ஒரு பாடல் கூட இடம் பெறாமல் வெளியான படம் தான் “குருதிப்புனல்”. தற்போது வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இந்த படம் ஒரு முன்னோடி என்று கூறலாம். பாடல்கள் இல்லாத திரைப்படத்தில் இடம்பெறும் நுட்பமான ஒலிகளை வெளிக்காட்ட பயன்படுத்தப்பட்ட ஒரு technology தான் Dolby Stereo Surround SR Technology. ஒரு படத்திற்கு ஒளி மட்டும் அல்ல ஒலியும் மிகவும் முக்கியமான ஒரு அங்கம் என்பதை பட குழுவினர் அதன் வழியாக தெரிவித்தனர். 1994-ல் ஹிந்தியில் வெளியான “துரோகால்” என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் “குருதிப்புனல்”. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், ஆக்சன் கிங் அர்ஜுன், நாசர், கௌதமி, மற்றும் கீதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Digital Format – மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே சமயத்தில் Digital Format வடிவில் முதல் முறையாக படமாக்கப்பட்ட திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை மனிஷா கொய்ராலா நடித்த “மும்பை எக்ஸ்பிரஸ்” ஆகும். இந்த திரைப்படம் 2005-ல் வெளியானது.

Live Sound Recording System – விருமாண்டி (2004)

தமிழ் cinema-வில் முதல் முறையாக Live Sound Recording System பயன்படுத்தப்பட்டது 2004-ல் வெளியான “விருமாண்டி” திரைப்படத்தில் தான். அதுவரை பல திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமாவை காண வரும் எளிய மக்களுக்கும் ஒரு புது விதமான அனுபவத்தை கொடுக்கும் விதமாக லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்ட இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த புது முயற்சியால் ஒவ்வொரு காட்சியிலும் ஊருக்கு தான் பாத்திரத்தின் உணர்ச்சி மற்றும் உணர்வுகளை மிகவும் எளிதாக பார்ப்பவர்களுக்கு எடுத்துக்காட்டியது. இந்த திரைப்படத்தையும் உலக நாயகனே எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து வெளியிட்டார். அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. 

Auro 3D 7.1 Sound Technology – விஸ்வரூபம் (2013)

பல சர்ச்சைகளுக்கு பிறகு 2013-ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் முதன் முறையாக Auro 3D 7.1 Sound Technology பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் முப்பரிமாண ஆடியோ அனுபவத்தை கொடுக்கக் கூடியது. இதற்கு முன் எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இப்படி உயர்தர ஒலிகளை அனுபவிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இந்த திரைப்படம் உலகம் முழுதும் வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை மற்றும் இயக்குனர் உலகநாயகன் கமல்ஹாசன் ஆவார். 

Prosthetic Makeup – இந்தியன் (1996)

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியான “இந்தியன்” திரைப்படம் தான் Indian cinema-வில் முதன் முறையாக Prosthetic Makeup பயன்படுத்தப்பட்டது. “சேனாபதி” என்ற பலமான கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது இந்த Prosthetic Makeup. இந்த makeup-ஐ “Special Makeup effects அல்லது FX Prosthesis” என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான திரைப்படங்களில் ஒரு முதுமையான கதாபாத்திரமாக ஒரு நடிகர்/நடிகையை காண்பிக்க தலைமுடியில் நரை முடி தெரிவது போன்று காண்பிக்கப்படும். ஆனால் முகம் இளமையாக தோன்றும். இதை தவிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் Prosthetic Makeup. இந்த வகை மேக்கப் ஒரு கதாபாத்திரத்தை கேமராவில் உண்மையானதாக தோன்றும் மாயைகளை உருவாக்கும். 1996-ல் தோன்றிய “சேனாபதி” கதாபாத்திரம் இத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் கம்பீரமாக நம் கண்களுக்கு தோன்றும்.

Laptop – மைக்கேல், மதன, காம, ராஜன் (1990)

மைக்கேல், மதன, காம, ராஜன்
Source Image:@ikamalhaasan(Instagram)

1990-ல் காமெடி டிராமா படமாக இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான “மைக்கேல், மதன, காம, ராஜன்” திரைப்படத்தில் தான் முதல் முறையாக தமிழ் சினிமாவில் Laptop என்ற ஒரு தொழில்நுட்பம் இருப்பதை மக்களுக்கு காண்பித்தது. இதில் ‘மதன்’ என்ற பணக்கார கதாபாத்திரம் உபயோகிப்பது போன்ற காட்சி வரும் பொழுது நாம் இதை காணலாம். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் ஆக வியந்து பார்க்க மற்றொரு காரணம் உலக நாயகன் நான்கு வேடத்தில் நடித்து, நான்கு கதாபாத்திரத்துக்கும் மிகச்சிறப்பான வேறுபாட்டை காண்பித்து இருப்பார்.

தமிழ் சினிமா என்று மட்டும் நிறுத்திவிடாமல் தனது கலைப்பணியை மொழி கடந்து பல தலைமுறை கடந்தும் செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் “உலக நாயகன்” என்று கொண்டாடப்படுகிறார்.

கொட்டுக்காளி” படத்திற்கு குவியும் விருதுகள்!!

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.