தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையான Kamal மற்றும் Kushboo காம்போவில் வந்த படங்கள்…
90’S காலகட்டத்தில் பெரிதும் ரசித்து கொண்டாட பட்ட Kushboo தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்களில் நடித்திருந்தார். பின்னர் நாயகியாக ஹிந்தி, தெலுங்கு படங்களில் அசத்தி வந்தார். முதன் முதலில் ரஜினிகாந்த், பிரபு கூட்டணியில் வந்த “தர்மத்தின் தலைவன்” மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமனார். தனது நடிப்பால் கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற முண்ணனி நடிகர்களிடன் நடித்து அசத்தி வந்தார்.

உலக நாயகன் என கொண்டாடப்படும் கமல் ஹாசன் அவர்களுடன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 90’S கால கட்டத்தில் பெரிதும் ரசிக்க பட்ட இருவரும் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருப்பது ஆச்சரியமான ஒன்று.
சிங்கார வேலன்:

ஆர். உதயகுமார் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் அவர்கள் கதையில், இளையராஜா இசையமைக்க, கமல் ஹாசன், குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, வடிவேலு, ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து 1992- ல் வெளிவந்த படம் சிங்கார வேலன். தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து குஷ்பூவை காதலிக்க முயற்சிக்கிறார். இறுதியில் பல பிரச்சனைகளை கடந்து குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கவுண்டமணியின் நக்கல் பேச்சால் பல இடங்களில் ரசிக்க வைக்கும்.
மைக்கேல் மதன காம ராஜன்:

கமல் ஹாசன் அவர்கள் 4 கதாபாத்திரங்களில் (மைக்கேல், மதன், காமேஸ்வரன், ராஜு) நடித்து அசத்திய படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வேறுபட்ட உடல் மொழி, பேச்சு என நடிப்பில் வேரியேஷன் காட்டியிருப்பார். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், இளையராஜா இசையில் கமல், குஷ்பூ, ஊர்வசி, ரூபிணி, நாகேஷ், மனோரமா போன்றோர் நடித்து 1990- ல் வெளிவந்தது. ராஜு என்ற கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக குஷ்பூ ஷாலினியாக நடித்திருப்பார்.
வெற்றி விழா:

நடிகர் பிரதாப் அவரின் இயக்கத்தில் 1989-ல் கமல் ஹாசன், பிரபு, குஷ்பூ, சசிகலா, ராதா ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் வெற்றி விழா. இந்த படம் ராபர்ட் லுட்லம் எழுதிய “The Bourne Identity” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கமல் ஹாசனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் குஷ்பூ ஜோடி நடித்திருப்பார்கள். 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் கலக்கியது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com