Home Cinema News தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவிட்ட கமல்… அவருக்கு பதிலாக தனுஷின் ‘இளையராஜா’ பயோபிக்கிற்கு திரைக்கதை எழுதப்போவதுயார்?

தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவிட்ட கமல்… அவருக்கு பதிலாக தனுஷின் ‘இளையராஜா’ பயோபிக்கிற்கு திரைக்கதை எழுதப்போவதுயார்?

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ‘இசைஞானி’ இளையராஜாவின் பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் வலம் வரப்போகிறார். இந்த படத்தை தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ஐ இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கப்போகிறாராம். 

GJHNKCfXAAAsmOm

‘இசைஞானி’ இளையராஜாவே இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யப்போகிறார். இதனை ‘கனெக்ட் மீடியா – PK ப்ரைம் புரொடக்ஷன் – மெர்க்குரி மூவிஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகுகிறதாம். முதலில் இந்த படத்தின் திரைக்கதையை எழுத ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது, கமல் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகி விட்டதால், அவருக்கு பதிலாக தனுஷே திரைக்கதை எழுதப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.