கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கைவசம் தமிழில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2 & 3′, மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’, ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு இயக்கும் படம் மற்றும் தெலுங்கில் நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898 AD’ ஆகிய படங்கள் உள்ளது.
இதில் ‘இந்தியன் 2’ படத்தை வருகிற ஜூன் மாதம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ஏ தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥#Indian2 🇮🇳
— Lyca Productions (@LycaProductions) April 6, 2024
🌟 #Ulaganayagan @ikamalhaasan
🎬 @shankarshanmugh
🎶 @anirudhofficial
📽️ @dop_ravivarman
✂️🎞️ @sreekar_prasad
🛠️ @muthurajthangvl… pic.twitter.com/kwiKyAcNta
இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ப்ரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி – கமல்!
இதற்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதாலும், கடந்த ஆண்டு வெளியான பார்ட் 2-வின் GLIMPSE-ம் அசத்தலாக இருந்ததாலும், இதனை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஆடியன்ஸ் ஆவலுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]