ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் தீபாவளி அன்று திரையிடப்பட்ட “அமரன்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ராஜ்குமார் பெரியசாமி இதற்கு முன்பு “ரங்கூன்” படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டிற்க்காக உயிர் துறந்த முகுந்தன் வரதராஜன் என்பவரின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
முகுந்தன் கேரக்டரில் சிவகார்த்திகேயனும், இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீ குமார், ஷியாம் மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
GV. பிரகாஷ் குமார் இசையில், 100 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அமரன் படம் திரையிடப்பட்ட 3 நாட்களிலேயே 80 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளது. சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் ராஜ் கமல் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்தது.
அன்புள்ள உலகநாயகன் கமலஹாசன் சார் ,
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 2, 2024
படம் வெளியான நாள் அன்று தொலைபேசியில் அழைத்து மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிவித்த பொழுது ஆரம்பித்தது இந்த அமரன் வெற்றி. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சார் 🙏❤️ https://t.co/DyUzItoF7I
கமல் ஹாசன் X பக்கத்தில் திரையிடப்பட்ட எல்லா இடத்திலும் மகத்தான வெற்றி பெற்றதாகவும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் ” பட ரிலீஸ் அன்று எனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நிமிடம் முதல் படத்தின் வெற்றி தொடங்கி விட்டதாகவும், உங்கள் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி” என்றும் பதிவிட்டுள்ளார்.
அமரன் படம் பல சிக்கல், பிரச்சனைகளை கடந்து தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, GV. பிரகாஷ் குமார் என ஒட்டுமொத்த படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார் கமல் ஹாசன்.
கிட்டத்தட்ட 3 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனவும், ராணுவ வீரரின் கதையை படமாக்குவது எளிதான காரியமில்லை என்றும் கூறியுள்ளார் கமல் ஹாசன். “Amaran” பட வெற்றிக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்.