Home Cinema News கமல் ஹாசன் படங்களின் வெற்றி ரகசியம்! 

கமல் ஹாசன் படங்களின் வெற்றி ரகசியம்! 

கமல் ஹாசன் தன்னுடைய படங்களில் வித்தியாசத்தையும் புதிய தொழில்நுடபத்தையும் இணைப்பவர்‌. அவர் படங்கள் மக்கள் மத்தியில் வெற்றியடைய காரணம் அவரின் பன்முகத்தன்மை தான். 

by Vinodhini Kumar

உலக நாயகன் கமல் ஹாசன் ஏற்காத பாத்திரம் இல்லை, அதற்காக மெனக்கெட்டு வித்தியாசமான நுணுக்கமான பல புதிய படைப்புகளை தமிழ் சினிமாவில் தந்துள்ளார். அப்படி அவரின் பன்முகத்தன்மை விவரிப்பது கடினம். ஒரே வருடத்தில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட படங்களில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அசத்தியிருப்பார். ஒரு துருவத்தில் தீவிரமான, உருக்கமான பாத்திரம், மறு துருவத்தில் நகைச்சுவை கலந்த கோலாகல விருந்து. இந்த இரண்டுக்கும் உள்ள இடைவேளை சில மாதங்கள் மட்டுமே. இப்படி உலக நாயகன் ஒரே கமல் நடித்த இரண்டு மாறுபட்ட திரைப்படங்களின் பட்டியல் இது.

1995- சதிலீலாவதி, குருதிப்புனல்

சதிலீலாவதி – Dr. சக்திவேல் கவுண்டர் 

கமல் ஹாசன் in Sathi Leelavathi

இயல்பான பாலு மகேந்திரா படத்தை போல ‘சதிலீலாவதி’ படமும் கல்யாணத்துக்கு பின் கள்ளக்காதல் கதையை சொல்லும் படம். தொடக்கத்தில் ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் விரும்பும் முக்கோண காதல் கதையாக எடுக்க பாலு மகேந்திரா முயற்ச்சித்தார். தயாரிப்பாளராக கமல் ஹாசன் இணைந்ததும், அந்த கதையை‌ மாற்றி புதிதாக காமெடி படமாக கதைக்களத்தில் அமைத்தார்‌. இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா, கமல் ஹாசன் நடித்துள்ளனர். 1995ல் ஜனவரி மாதம் வெளியான இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் கமல் ஹாசன். 

Sathi Leelavathi cast

விருப்பமில்லாத திருமணத்தில் அருணாச்சலம் (எ) அருண் தள்ளப்படுகிறார். தனது மனைவியான லீலாவதி (எ) லீலா உடைய தோற்றத்தால் இருவருக்கும் நடுவில் மனஸ்தாபம் ஏற்படுகிறது. திருமண வாழ்க்கையை வெருக்கும் ரமேஷ் அரவிந்தின் பாத்திரம், ப்ரியா என்ற இளம் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இருவரும் பெங்களூருக்கு விடுமுறைக்கு செல்கிறார்கள்.

அங்கு தன்னுடைய இளம்வயது நண்பனான Dr. சக்திவேல் கவுண்டர் (கமல் ஹாசன்) மற்றும் அவரின் மனைவி பழனியம்மாள் (கோவை சரளா) ஐ சந்திக்கிறார். அதில் இருந்து அவரின் கள்ளக்காதல் பற்றி அறிந்து சக்திவேல் கவுண்டர் என்ற‌பாத்திரத்தில் அசத்தியிருப்பார் கமல் ஹாசன். இந்த படத்தில் அவரின் கொங்கு தமிழுக்கு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்‌. உடன் கோவை சரளாவின் தனித்துவமான காமெடிகளும் கமல் ஹாசனுடன் நன்றாக ஒத்துபோனது‌. இந்த படமும் அவரின் வித்தியாசமான முக்கியமான கதாப்பாத்திரத்தை அடக்கிய ஒன்று. 

குருதிப்புனல் – DCP ஆதி நாராயணன்

Kuruthi Punal movie poster

தமிழ் சினிமாவின் பாதையை மாற்றிய சில படங்களில் ‘குருதிப்புனல்’ கட்டாயம் ஆனது. தயாரித்து, திரைக்கதையும் எழுதி நடித்தும் இருப்பார் கமல் ஹாசன். படத்தில் நடிகர்கள் அர்ஜுன், நாசர், கௌதமியின் நடிப்புக்கு தனி ரசிகர்கள் என்றால் படத்தின் வசனங்களுக்கும் திரைக்கதைக்கும் தனி ரசிகர்கள் உண்டு. காவல் அதிகாரிகளான கமல் மற்றும் அர்ஜுன், நக்சலைட்களின் தலைவரை பிடிக்க ‘Operation Dhanush’ ஒன்றை நடத்துகின்றனர். அதில் நக்சலைட் தலைவரான நாசர், பத்ரி என்ற‌ பாத்திரத்தில் கமல் ஹாசனுக்கு இணையாக திரையில் மிரட்டியிருப்பார். 

Kamal face makeup Kuruthipunal

திரைக்கதை தன்னுடைய கையில் இருந்தாலும் தனக்கென தனியாக முக்கியத்துவமும் இல்லாமல் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை தீர்க்கமாக எழுதியிருப்பார் கமல் ஹாசன். நடிகர் நாசர் வில்லத்தனத்தின் உச்சத்தை காட்டியிருப்பார். எளிதாக அளிமுகப்படுத்தப்பட்ட பாத்திரத்தில் நாசர் இருந்தாலும், அவரின் வசனங்கள் மற்றும் நிதானமான நடிப்பும் பார்ப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்கும். 

இன்றளவும் பல இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஒரு க்ளாசிக் உதாரணமாக அமைந்துள்ளது ‘குருதிப்புனல்’. முற்போக்கான சிந்தனைகளும் வசனங்களும் கொண்ட படம். 

வீரம்னா என்னனு தெரியுமா, படம் இல்லாத மாதிரி நடிக்கிறது.

Kuruthi Punal

இதுமாதிரியான பொய்யான சிந்தனையாளர்களை திரையில் சுட்டிக்காட்டி, சமூகத்தில் தீர்க்கமான காட்சிகளையும் கதையில் சேர்த்திருந்தார்கள்‌. படத்தில் உண்மையான காவல்துறை விதிகளுக்கு தகுந்தவாறு பாத்திரங்களுக்கு மேக்கப் தோரணையை பயன்படுத்தினர். கமல் மற்றும் நாசர் இந்த படத்தில் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் கொண்டு வெகு நேரம் அர்ப்பணித்ததும் சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது. 

1996- இந்தியன், அவ்வை சண்முகி

இந்தியன்- சேனாதிபதி, சந்த்ரு 

இந்திய சுதந்திர போராட்ட வீரராக இருந்த வீரசேகரன் சேனாதிபதி, சென்னையில் நடக்கும் ஊழல்களை எதிர்க்கும் நபர்‌. அரசாங்கத்தில் செய்யும் ஊழல்களை துணிந்து எதிர்த்து, காவல் துறையால் தேடப்படும் இவர், தன் சொந்த பிள்ளையின் உயிரை காப்பாற்ற கூட லஞ்சம் தராத நேர்மையான நபர். 

Indian 1 poster

அவரின் மகன் சந்த்ரு (கமல் ஹாசன் இரட்டை வேடம்) லஞ்சம் வாங்கி RTO அலுவலகத்தின் வெளியே பல பேருக்கு லைசென்ஸ் வாங்கி தருபவர். பின்னர் லஞ்சம் வாங்கி ஒரு பெரிய தவறுக்கு ஆளாகியும், அதனுடைய பழியை ஏற்காமல் இருப்பதும் இந்த விஷயம் இந்தியன் தாத்தாவிற்கு தெரியவர அவரின் சொந்த மகனை தேடும் இரண்டாம் பாதி அமையும். இந்த படத்தில் கமல் ஹாசன் வயது முதிர்ந்த தோற்றத்திலும் இளம் மகனுக்கும் இந்தியன் படத்தில் நடித்திருப்பார். இந்த வேடங்களுக்கு அவரின் அர்ப்பணிப்பு பெரிதாக பேசப்பட்டது. இதன் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிட இயக்குனர் சங்கர் தயாராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அவ்வை சண்முகி- பாண்டியன், அவ்வை சண்முகி

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் மாறுபட்ட வேடத்தில் வந்த படம். பல ஆண்டுகளாக கமல் ஹாசன் இந்த படத்தின் கதையை திட்டமிட்டு வைத்ததாகவும், ஆங்கிலத்தில் வெளியான Kramer vs. Kramer மற்றும் Tootsie படங்களில் இருந்து அவ்வை சண்முகம் படத்தின் கதையை தீர்மானித்துள்ளார். Mrs. Doubtfire படத்தோடு அதிகமாக ஒப்பிடப்பட்டாலும், இந்த ஒப்பீட்டை மறுத்துள்ளார் கமல் ஹாசன். 

Avvai Shanmugi Kamal

காதலித்து திருமணம் செய்து பெண் ஏதோ ஒரு மனசங்கடத்தால் பகிர்ந்து செல்ல, தன்னுடைய மகளை வாரத்தில் ஒருமுறை மட்டுமே பார்க்கும் நிலமை வந்ததால் மாறுவேடத்தில் மாமனார் வீட்டுக்கு செல்கிறார். வயது முதுமையான பாட்டி அவ்வை சண்முகி என்று முழுமையாக மாறிய தன்னுடைய மகளை பார்த்துக்கொள்ள செல்கிறார் பாண்டியன் (கமல் ஹாசன்). 

Avvai Shanmugi
Source: IMDb

படத்தை பார்ப்பவர்களுக்கு கமல் ஹாசனின் மாறுவேடம் பிரம்மிப்பாக இருந்தது. இன்றும் அவ்வை சண்முகி பாத்திரத்தில் கமலின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிகிறது. உடை, மேக்கப் மற்றும் மாற்றாமல் தோரணை, பாவணை, குறல், அசைவு என ஒவ்வொரு ஃப்ரேமிலும் பாட்டியாகவே மாறியிருப்பார்‌. வெளிநாட்டில் இருந்து மேக்கப் கலைஞர்களை வரவழைத்து, சுமார் ஜந்து மணி நேரம் மேக்கப் போட்டு அவ்வை சண்முகியாக மாறியுள்ளார்‌. இதனால் கமலுக்கு அலர்ஜி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது போன்ற அர்ப்பணிப்பு வேறு மற்ற நடிகர்களிடம் எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒன்று. 

2000- ஹே ராம், தெனாலி

ஹே ராம்- சாகெத் ராம்

Hey Ram poster
Source: IMDb India

இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை பற்றி பேசுவது மட்டுமல்லாமல் அதன் ஆழமான பின்னணியையும், காந்தியின் சிந்தனைகள் எப்படி மாறுபட்ட புறிதலாக இந்தியாவில் பரவி இருக்கிறது என்ற கருத்துடன் எடுக்கப்பட்ட படம். துணிச்சலான கதையில் மதம் சார்ந்த தவறான புரிதல், சுதந்திர இந்தியாவில் 1947ற்கு பிறகும் நிலவும் பிரிவினைகளை மிக எதார்த்தமாக parallel சினிமா கதையாக இயக்கி, எழுதி, தயாரித்து நடித்திருப்பார் கமல் ஹாசன். தன்னுடைய தனிப்பட்ட சிந்தனைகளை புறம் தள்ளி நாட்டில் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றை திரைக்கதையாக எழுதி, ஒற்றுமையை வலியுறுத்தியிருப்பார். 

ராம் என்ற தனிப்பட்ட நபரின் கண்ணோட்டத்தில் அப்போது இருந்த அரசியல் சீற்றத்தை அணுகிய விதமும், படத்தின் இரண்டாம் பாதியில் மனமாற்றத்தில் முரணாக இல்லாமல் இயற்கையான மாற்றத்தை திரைக்கதையில் காட்டியது கமல் ஹாசனின் திரைப்பயணத்தில் அவர் எடுத்த முக்கியமான துணிச்சலான முடிவாகும்‌. 

Kamal as Ram in Hey Ram

பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தில் அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் பல. படத்தில் ராம் என்ற நபரின் கதையை தாண்டி அவரின் அறியாமையை பல மக்களுடன் ஒப்பிடும்படி காட்டியிருப்பார். உடன் நடித்த நடிகரான ஷாருக் கான் தான் உலகளவில் பிரபலமான நடிகராக இருந்தபோதும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய போதும் ‘ஹே ராம்’ படத்திற்காக பணம் வாங்காமல் நடித்தார். காரணம் கமல் ஹாசன் மற்றும் கதையின் சொல்லப்பட்ட கருத்துடன் அவர் ஒப்புக்கொண்டதால் தான். 

தெனாலி- தெனாலி சோமன் 

Kamal in Thenali

ஸ்ரீ லங்காவில் போரின் தீவிரத்தால் மன நலம் சற்றே பாதிக்கப்பட்ட தெனாலி, எதை பார்த்தாலும் பயம் என்ற நிலையில் கைலாஷ் என்ற மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்வார். இந்த படத்துக்காக கமல் இலங்கை தமிழில் பேசியிருப்பார்‌. அவருக்கு உள்ள படங்கள் பற்றி அடுக்கடுக்காக பட்டியல் போட்டு பேசும் வசனம் ஆகட்டும், டாக்டர் கைலாஷின் குடும்பத்துடன் அவர் அடிக்கும் காமெடியான காட்சிகள் என முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் கமல் அசத்தியிருப்பார். 

ஆங்கில படமான What About Bob? படத்தின் தழுவலை, கிரேசி மோகனின் தனித்துவமான வசனத்தில் காமெடி படத்தை வெற்றிகரமாக இயக்கியிருப்பார் கே. எஸ். ரவிக்குமார். நடிகர் ஜெயராம் உடன் விளையாட்டான வசனங்கள் பேசி படம் முழுவதும் சிரிப்புக்கும் திறமைக்கும் பஞ்சமில்லாத படமாக அமைந்தது ‘தெனாலி’. 

2004- விருமாண்டி, வசூல் ராஜா M.B.B.S

விருமாண்டி – விருமாண்டி தேவர்.

Kamal in Virumandi

கிராமத்து கதைக்களத்தில் கமல் ஹாசன் நடிப்பது ஆச்சரியம் இல்லை, ஆனால் அப்போது வந்த மற்ற கிராமத்து பின்னணி கொண்ட கதைகளை போல் இல்லாமல் கதைக்கு தேவையான கருத்து, வன்முறை, சண்டை காட்சிகள் என தீவிரமான படமாக அமைந்தது ‘விருமாண்டி’. இந்த படத்தையும் தயாரித்து, எழுதி, இயக்கியிவர் கமல் தான். 

சிறைச்சாலையில் தொடங்கும் கதையில் முரட்டுத்தனமான கொடூரனாக சித்தரிக்கப்படும் விருமாண்டி, நிஜத்தில் யார்? அவர் எல்லோரும் சொல்லுவது போல் பல கொலைகள் செய்து மரண தண்டனை கைதியாக சிறைச்சாலையில் இருக்கும் விருமாண்டியின் கதை தான் என்ன? வித்தியாசமான கதை தொடக்கம், இதுவும் Parallel கதையாடலில் அமைந்து பார்க்கும் மக்களை ஆவலுடன் வைக்கும் கதையாக இருந்தது‌. இரண்டு மரண தண்டனை கைதிகள், இருவரும் சட்டத்தை மீறியவர்கள், இருவருக்கும் வெவ்வேறு கண்ணோட்டம், இரண்டு துருவங்களின் கதைகளை திரைக்கதையில் பொருத்தி படத்தை நகர்த்தியிருப்பார் கமல். 

Virumandi main cast

இயக்குவதில் கவனம் செலுத்தினாலும், எழுத்திலும் நடிப்பிலும் தனது திறமையை தெளிவாக பயன்படுத்தி, உடன் நடிக்கும் பாத்திரங்களின் இயர்க்கையான உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று வெளிப்படையாக காட்டியிருப்பார்‌.  

வசூல் ராஜா M.B.B.S- வசூல் ராஜா 

Vasool raja MBBS poster

ஹிந்தியில் முன்னா பாய் M.B.B.S என வெளியான படத்தை தமிழில் வசூல் ராஜா M.B.B.S என எடுத்தனர்‌. கலகலப்பான நகைச்சுவை படமாக அமைந்த இந்த படத்தில், கமல் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவராக வருவார். பின்னர் காலத்தின் கட்டாயத்தால் டாக்டராக வேண்டும் என முடிவெடுத்து அவர் நண்பர்களுடன் நடத்தும் காமெடிகள் தான் கதை. 

படத்தில் கமலின் நடிப்பும் வசனங்கள் பேசும் விதமும் ஒரு பலம் என்றால் அந்த வசனத்தால் படம் முழுதும் சிரிப்பு மழையை வரவைத்து கிரேசி மோகனின் எழுத்து மற்றும் ஒரு பலம். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை உடன் ஆழமான கருத்துகளும் அங்கங்கே இருக்கும். 

Kamal Hassan and Crazy Mohan

‘What is பூட்டகேசு?’ , ‘How do I know sir?’ , ‘What is the procedure to change the room sir?’, என மறக்கமுடியாத பல வசனங்கள் கொண்ட படம். தத்துவத்தை காமெடியன் கலந்து மிக எளிமையாக தந்திருப்பார். இயக்குனர் சரண், தமிழில் பல மாற்றங்களை தைரியமாக செய்து தயாரிப்பாளர்களின் அவநம்பிக்கையும் மீறி படத்தை வெளியிட்டார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் இன்றும் பார்க்க பார்க்க அசராத ஒன்றாக அமைந்தது நடிகர் கமல் எடுத்த முடிவும் காரணம். படத்தில் பல நடிகர்களை அவரே விரும்பி இயக்குனரிடம் பேசி சேர்க்க செய்தது, உணர்ச்சிகளின் சூட்சுமத்தை அறிந்து நகைச்சுவையை தேவைக்கு ஏற்ப வெளிப்படுத்தியது என அனைத்தும் பிரமாதமாக பொருந்தியது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.