Home Cinema News Indian 2- போஸ்டர் உடன்‌ முதல் பாடல் அப்டேட்! 

Indian 2- போஸ்டர் உடன்‌ முதல் பாடல் அப்டேட்! 

by Vinodhini Kumar

Indian 2- போஸ்டர் உடன்‌ முதல் பாடல் அப்டேட்!  படத்தில் சேனாதிபதி தாத்தா மீண்டும் வந்துள்ளார்.

Indian படம் இயக்குனர் சங்கரின்‌ திறைப்படங்களில் மிகவும் முக்கியமான படம். அதன் கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் அத்தனையும் மிக விமர்சையாக பாராட்டப்பட்டது. 1996ல் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா மடோன்ட்கர், கவுண்டமணி, சுகன்யா நடித்து வெற்றியான படம் இந்தியன். 

Kamal Hassan and Dir Shankar

இந்த படத்தில் சமுகத்தில் நடக்கும் சீர்கேடுகளை தட்டி கேட்கும் வயதான சேனாதிபதி தாத்தா, அரசாங்கத்தையும், அதிகாரத்தையும் கேள்வி கேட்கும் பெரும் பிம்பமாக வருவார். இயக்குனர் சங்கர் Indian 2 வர வாய்ப்பு உள்ளதாக கூறியது முதல் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடுவில் பல இடையூருகள், தடைகள் வந்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.

Indian 2 poster

Indian 2 படத்தின் போஸ்டர் வெளியாகி, அதில் சூரிய ஒளியில், குதிரை மேல் இந்தியன் தாத்தா வருவது போல் உள்ளது. இதில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் முதல் பாடல் மே 22ல் வெளியிடப்படும் என்றும் படம் ஜூலை 12ம் தேதி வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்தியன் 2 படம் பல இன்னல்கள் தாண்டி லைகா புரொடக்சன் தயாரிப்பில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாக உள்ள படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குனர் சங்கர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரன் கூட்டணியில் வரும் முதல் படமாகவும் இந்தியன்‌ 2 அமைவது மற்றொரு புதிய செய்தி.

இதுவரை ஏ ஆர் ரஹ்மான் இசையில் தான் இயக்குனர் சங்கரின் படங்கள் வெளியாதியதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிகைகள் ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், நடிகர் சித்தார்த், பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேறு, எஸ் ஜே சூர்யா என நடிப்பிற்கு பஞ்சமில்லாமல் பெரிய குழு படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. மீண்டும் இந்தியன்‌ தாத்தாவை பெரிய திரையில் பார்க்க பலர் காத்துக்கொள்ளது இந்த படத்தின் முதல் பாகம் பேசிய அரசியலும், அதில் வரும் முக்கிய பாத்திரங்கள் தான். இந்தியன் 2 படத்தை மேலும் தள்ளி போடாமல் ஜூலை 12ம் தேதி ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தால் பெரிய வசூல் வேட்டை உள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.