சிறுத்தை சிவா இயக்கத்தில் Pan India படமாக உருவான கங்குவா படம் வரும் நவம்பர் 14 -ல் ரிலீஸ் ஆகவுள்ளது. சூர்யா, திஷா பட்டாணி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, நட்டி நடராஜன், யோகி பாபு, கோவை சரளா, பாலா சரவணன், அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ளனர்.
கங்குவா படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இசை வெளியிட்டு விழாவும் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இதில் பணியாற்றி வந்த எடிட்டர் நிஷாத் யூசுஃப் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியானது. அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Heartbroken to hear Nishadh is no more! You’ll always be remembered as a quiet and important person of team Kanguva.. In our thoughts and prayers..! My heartfelt condolences to Nishadh’s family & friends. RIP pic.twitter.com/ClAI024sUe
— Suriya Sivakumar (@Suriya_offl) October 30, 2024
மலையாள சினிமாவில் தள்ளுமாலா, உண்டா, ஒன், ஆப்ரேஷன் ஜாவா, சாவேர், கிராண்ட்மா போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றி வந்தார் நிஷாத் யூசுப். 43 வயதான யூசுப் 2022 -ல் வெளியான தள்ளுமாலா படத்திற்கு கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றார். தற்போது வெளியாக காத்திருக்கும் மோகன்லால் மற்றும் மம்முட்டி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
மதன் கார்க்கி வரியில் கங்குவா படத்தின் “தலைவனே என் தலைவனே” பாடல் வெளியானது.
இவரின் எதிர்பாராத மறைவு தமிழ், மலையாள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞராக இருக்கும் யூசுப்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]