நடிகர் சூரியா 2022ம் ஆண்டிற்கு பிறகு கதாநாயகனாக மீண்டும் நடிக்கும் படம் ‘கங்குவா’. இயக்குனர் சிறுத்தை சிவா கூறிய பிரம்மாண்டமான வரலாற்று கதையில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார் சூரியா. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
Relive the thrill! Hyderabad’s #Kanguva Meet was all about joy, energy, and love ❤️🔥#KanguvaFromNov14 🦅@Suriya_offl @thedeol @directorsiva @ThisIsDSP @DishPatani #StudioGreen @gnanavelraja007 @vetrivisuals @supremesundar @UV_Creations @KvnProductions @PharsFilm… pic.twitter.com/nNjvNIQwi2
— Studio Green (@StudioGreen2) October 26, 2024
இந்த படத்தில் நடிகர்கள் சூரியா. பாபி தியோல். திஷா பாட்னி, யோகி பாபு,கோவை சரளா, நடராஜன் சுப்ரமணியம், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடைய பிரம்மாண்டமான இசையில் இதுவரை வெளியாகிய பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, அதே போல இன்று வெளியாகவுள்ள பாடல்களும் அமையும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தை பற்றி வெளிப்படையாக பேசியபோதும் நடிகர் சூரியா உடைய பாத்திரமும், பாபி தியோல் உடைய நடிப்பு பற்றி புகழாரம் சூட்டியவர், இயக்குனர் சிவா இப்படத்தை அற்புதமாக உருவாகியுள்ளதாகவும், இந்த படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் கூறினார்.
Francis மற்றும் கங்குவா என்ற இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் நடிகர் சூரியா. இந்த இரண்டு கதாபாத்திரங்களை பற்றிய இரண்டு பாடல்கள் ஏற்கண்ணாவே வெளியாகியது. Fire பாடலில் கங்குவாவாக நடிகர் சூரியா ஒரு அட்டகாசமான வேடத்தில் வருகிறார். அதற்கு அப்படியே மாறாக YOLO பாடல் Francis மற்றும் திஷா பாட்னி உடைய பாடலாக வெல்கியாகியுள்ளது.
Just happy memories and smiling faces from Hyderabad❤️#TheKanguvaTour #KanguvaFromNov14 🦅@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @gnanavelraja007 @vetrivisuals @supremesundar @UV_Creations @KvnProductions @PharsFilm @abineshelango… pic.twitter.com/eehkt74nM0
— Studio Green (@StudioGreen2) October 25, 2024
இயக்குனர் சிவா மற்றும் சூரியா ஆகிய இருவரும் இதுவரை ஒரு புது முயற்சியாக ஒரு வரலாற்று கதையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தையும், இரண்டு மாறுபட்ட காலங்கள் பிணைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலும் ‘கங்குவா’ படத்தை உருவாக்கியுள்ளனர்.
2024ன் இந்தியளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் முக்கியமான இடம் ‘கங்குவா’ படத்திற்கு உண்டு. இப்படத்திற்கு ஏற்கனவே முடிவாக்கப்பட்ட ரிலீஸ் தேதி அக்டோபர் 10 ஆக இருந்த நிலையில் அந்த தேதியில் நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படம் வெளியாவதால் இப்போது தேதி மாற்றப்பட்டு நவம்பர் 14 ஆக உள்ளது. மொத்தம் 10 மொழிகளில் 2D மற்றும் 3D யில் ‘கங்குவா’ படம் வெளியாகவுள்ளது.