Home Cinema News பெரும் எதிர்பார்ப்புடன் சூரியாவின் ‘கங்குவா’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

பெரும் எதிர்பார்ப்புடன் சூரியாவின் ‘கங்குவா’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

நடிகர் சூரியா, ஹிந்தி நடிகர் பாபி தியோல், நடிகை திஷா பாட்னி ஆகியோர் நடிக்கும் வரலாற்று படம் ‘கங்குவா‘. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தின் ட்ரைலர் தற்போது பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியானது. 

நடிகர் சூரியாவை முற்றிலும் மாறுபட்ட, ஆக்ரோஷமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலரில் நடிகர் பாபி தியோல் ஒரு குடியின் தலைவன் போலவும், கங்குவாவின் வருகையும் மிக பிரம்மநடமாக காட்டப்பட்டுள்ளது. கோவமான ஒரு Raw படமாக தெரிகிறது ‘Kanguva’. 

அடர்ந்த காட்டுக்குள் வாழும் பூர்வக்குடிகளின் நடுவே நடக்கும் சண்டை காட்சிகளும், மிருகங்களின் கிராபிக்ஸ், ட்ரைலரில் ப்ரம்மிப்பாக அமைந்துள்ளது. முக்கியமாக நடிகர் சூரியாவின் வசனங்களும், கண்கள் வழியாக அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விதமும் அதிரடியாக அமைந்துள்ளது. 

கங்குவா படத்தில் இணையும் நடிகர் கார்த்தி!

நடிகை தீஷா பாட்னி உடைய பாத்திரம் பற்றி எதுவும் ட்ரைலரில் வெளியாகவில்லை. அனால் சமீபத்தில் நடிகர் கார்த்தி ‘Kanguva’ படத்தில் நடிப்பதாக வந்த செய்திக்கு தீனி போடும் விதமாக, ட்ரைலரின் முடிவில் வெள்ளை குதிரையில் முகம் தெரியாத ஒருவரை காட்டி சஸ்பென்ஸ் உடன் முடித்துள்ளார். 

Karthi in Kanguva

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அதிரடியான இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி காட்டியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான இன்று ‘Kanguva’ படத்தின் ட்ரைலர் வெளியாகி, அவரின் மீதும் இந்த படத்தின் மீதும் உள்ள எதிர்பார்ப்பை பன்மடங்கு பெருகியுள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.