நடிகர் சூரியா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் நடிகர் சூரியா.
Thank you everyone, for making our #MeiyazhaganAudioLaunch so special and successful 💖
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 2, 2024
We are truly grateful for the love and support you’ve given us and for the Music of #Meiyazhagan.
Stay Tuned for more exciting news ✨
And get ready to experience the heart-warming tale of… pic.twitter.com/gYUcVCMAII
நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்தின் இசை வெளியிட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சூரியா, தன்னுடைய ‘கங்குவா’ படத்தை பற்றி பேசினார். அக்டொபேர் 10ம் தேதி வெளியாக இருந்த இப்பட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ படத்துடன் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவும் மற்றும் வேட்டையன் படத்துக்கு வழி விடும் நோக்கத்துடன் ‘வேட்டையன்’ படத்துடன் வெளியிட மாட்டோம் என்ற காரணங்களால் ‘கங்குவா’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது என சூரியா தன உரையில் அறிவித்தார்.

அக்டோபரில் மோதப்போகும் தமிழ் சினிமாவின் நான்கு பெரிய படங்கள்!
மேலும் கங்குவா படத்தை பற்றி பேசிய சூரியா “இரண்டரை வருடங்களுக்கு மேல் இயக்குனர் சிவா மற்றும் படக்குழுவினரின் கடுமையாக உழைப்பால் உருவாகியுள்ள படம் எப்போது வெளியானாலும் ரசிகர்களாகிய நீங்கள் அதற்கு ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.
2024ன் மாபெரும் பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது சூரியாவின் ‘கங்குவா’. சுமார் 350 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் பெருத்த ஆவலுடன் வெளியாக காத்திருக்கிறது. இந்த மாபெரும் பட்ஜெட் காரணமாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்துடன் போட்டிபோட படக்குழு தயங்குகிறார்கள் என்ற செய்தியும் பரவுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]