தெளிவான கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென தனி இடத்தை பிடித்து, இப்போது அதை Pan India அளவிற்கு எடுத்து செல்லும் முயற்சியில் நடிகர் சூரியா நடித்துள்ள படம் தான் ‘Kanguva’. இயக்குனர் ‘சிறுத்தை’ சிவாவின் பிரம்மிப்பான கதைக்களத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதையை பெரும்பாலும் பேசும் படமாக அமைவது தான் ‘கங்குவா’.
நடிகர் சூரியா இந்த படத்தில் ‘Kanguva’ மற்றும் பிரான்சிஸ் என்ற இரண்டு பாத்திரத்தில் நடிப்பது ஏற்கனவே தெரிந்தது தான். ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்த ரிலீஸ் ட்ரைலரில், இந்த இரண்டு கதாபாத்திரங்கள் பற்றிய காட்சிகள் கட்டப்பட்டது. ‘பெருமாச்சி’ என்ற தீவில் கங்குவாவும் தற்போதைய நிகழ்காலத்தில் பிரான்சிஸும் என ட்ரைலர் காட்டப்பட்டது. இரண்டு கதாபத்திரிங்களும் அதிரடியான சண்டை காட்சிகளில் ஈடுபட்டுளைளதும், இவர்களுக்குள் என்ன சம்பந்தம் என விவரிக்கும் படமாக உருவாகியுள்ளது ‘கங்குவா’.
பெருமாச்சி, அரத்தி, முக்காடு, மண்டையாறு, வெண்காடு ஆகிய 5 தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, அதில் பெருமாச்சி தீவினரின் தலைவராக கங்குவா இருக்க, அரத்தி தீவிற்கு நடிகர் பாபி தேயோல் உடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் குறிப்பாக ரசிகர்கள் பல முக்கிய குறிப்புகளை ட்ரைலரில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
ட்ரைலரின் முடிவில் முகம்தெரியாத ஒரு கதாபாத்திரம் ஒன்று கம்பிரமாக சிரிப்பதை காட்டி முடித்துள்ளனர். இதே போல முதலில் வெளியான டீசரில் கூட குதிரை மேல் ஒரு முகம் காட்டாமல் ஒருவர் வருவதை பார்த்து, அப்போதே ரசிகர்கள் அந்த கதாபாத்திரம் நடிகர் கார்த்தி தான் என முடிவெடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கூட கேட்க, அதை ஏற்கவுமில்லாமல், மறுக்கவுமில்லாமல் ஒரு பதிலளித்தார்.
Vaa..!#Kanguva all yours from Nov 14th#KanguvaTrailer2
— Suriya Sivakumar (@Suriya_offl) November 10, 2024
Tamil: https://t.co/lkjaYMBcZS
Hindi: https://t.co/3efp62ro4s
Telugu: https://t.co/Yd08uy1HZh
Malayalam: https://t.co/LALD5yIqzh
Kannada: https://t.co/qv1dUtCkZw pic.twitter.com/aGibjHZueR
Studio Green தயாரிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரின் இசையில் சமீபத்தில் கூட ‘மன்னிப்பு’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போது ‘Kanguva’ படத்தில் cameo பாத்திரத்தில் நடித்திருப்பது நடிகர் கார்த்தி தான் என இணையத்தில் வரிகளாக பேசி வருகிறார்கள். இந்த படத்தில் இதுவரை கதாநாயகியாக நடிக்கும் திஷா பாட்டனி பற்றிய எந்தவித தகவலும் இல்லை, இவரின் கதாபாத்திரம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா இல்லையா? என்பது நவம்பர் 14ம் தேதி படம் வெளியாகும்போது தெரியவரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]