Home Cinema News கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணியில் “Meiyazhagan”… 

கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணியில் “Meiyazhagan”… 

அரவிந்த் சாமி, கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்” படத்தின் FIRST LOOK வெளியாகியுள்ளது. 

by Sudhakaran Eswaran

அரவிந்த் சாமி, கார்த்தி நடிக்கும் “Meiyazhagan” படத்தின் First Look வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்ப்பு பெறவில்லை. இதை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் “கார்த்தியின் 26” படத்தில் இணைந்து இருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ பட புகழ் பிரேம்குமார் இயக்கும் “கார்த்தி 27” படத்தில் First லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 

Untitled design 21 4

இதில் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. FIRST லுக் போஸ்டரில் அரவிந்த் சாமி சைக்கிளில் முன்னாடி அமர்ந்து கொண்டும், கார்த்தி பின்னாடி அமர்ந்து இருப்பது போல வெளியானது. அதை தொடர்ந்து second  லுக் போஸ்டரில் காளையின் முன்பகுதியில் கார்த்தி பாசமாக பார்ப்பது போலவும்  மற்றொரு போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்திற்கு தலைப்பு “மெய்யழகன்” என வைத்துள்ளனர் படக்குழு. 

இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண், நடிகை ஸ்ரீ திவ்யா, சீரியல் நடிகை சுவாதி ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

எதார்த்த நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகு விரைவில் கவர்ந்தவர் கார்த்தி பிரேம் குமார் படத்தை தொடர்ந்து தீரன் 2, சர்தார் 2, கைதி 2 என தொடர்ந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.