அழகான சிரிப்பு, எதார்த்த பேச்சு, குறும்பு தனம், நடிப்பு என தமிழ் சினிமாவில் சிவகுமாரின் மகன் என்பதை தாண்டி தன்னை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்தார் KARTHI.
சிவகுமார் அவர்களுக்கு இரண்டாவது மகனாக 1977-ல் பிறந்தார் கார்த்தி. படிப்பில் கெட்டக்காரரான கார்த்தி பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். சிறு வயதில் KARTHI நல்ல பிள்ளை போலவும், சூர்யா சேட்டை செய்யும் பிள்ளையாகவும் இருந்துள்ளனர். பொறியியல் படிப்பை முடித்த கார்த்தி 5000 சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தார். இது எனது எதிர்காலத்திற்கு சரியாக இருக்காது என்று நினைத்து உயர் படிப்பிற்கு அமெரிக்கா சென்றார்.

பின்னர் அமெரிக்காவில் உயர்படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கார்த்தி இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிவகுமார் அவர்களின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என திரை துறைக்கு மிகவும் பழக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து சினிமா வாழ்வில் காலடி எடுத்து வைத்தார் கார்த்தி.
முதலில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மணிரத்னம் அவர்களிடம் கேட்க, அவர் அந்த சமயம் “ஆயுத எழுத்து” படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அதில் ஒரு முதுமுக நடிகர் தேவை என கூறியிருந்த நிலையில் கார்த்தி அப்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். மைக்கேல் ஆக சூர்யா அதில் நடித்திருப்பார். அவரது நண்பனாக சில காட்சியில் கார்த்தி தோன்றியிருப்பார்.
“இயக்குனர் எந்த வயதிலும் ஆகலாம், ஆனால் இளம் வயதில் மட்டுமே ஹீரோ ஆக முடியும்” என்று தந்தை சிவகுமார் அறிவுரை கூறவே நடிப்பின் பக்கம் திரும்பினார் கார்த்தி. அந்த சமயம் அமீர் ஒரு கதையை கொண்டு சூர்யாவுடன் கூறினார். இதற்க்கு முதுமுக நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூற தனது தம்பி கார்த்தியை நடிக்க வைக்கலாம் என அமீரிடம் கூறினார் சூர்யா. அதன் விளைவு தான் “பருத்தி வீரன்” என்ற படைப்பு.

பின்னர் செல்வராகவன் சோழ தேசத்தின் வீழ்ச்சி, பாண்டிய தேசத்தின் வளர்ச்சி என்ற கதை கருவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக சூர்யாவிடம் கூறினார். அதில் உன்னை நடிக்க வைக்கலாம் என்றும் ஆனால் மிகவும் சிரம பட வேண்டி இருக்கும் என்றும் கார்த்தியிடம் அறிவுரை கூறினார் சூர்யா. அதை சவாலாக எடுத்து தனது முழு நடிப்பு திறனையும் கஷ்டம் பாராமல் வெளிப்படுத்தினார் கார்த்தி. ஆனால் அந்த சமயம் படம் ஓரளவு தான் இருந்தது என்று ரசிகர்களால் கமெண்ட் வந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து அந்த படத்தின் அருமையை அறிந்து தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் என ரசிக்கும் படியான படங்களை தந்தார். பெரும்பாலும் தான் நடித்த படங்களில் வேறு வேறு இயக்குனர்கள் மற்றும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ரசிக்கும் படியான படங்களில் நடித்து வந்த கார்த்தி 2017-ல் உண்மை சம்பவம் குறித்த கதையான “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து எல்லா தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். அதற்க்கு முன்பு வரை ஜாலியான கதாபாத்திரம், கிராமத்து கதாபாத்திரம் என நடித்து வந்த கார்த்தியின் சினிமா வாழ்வை அடுத்த கட்டத்திற்கு முதிர்ச்சியடைய வைத்தது.
கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் என தன்னை முன்னிறுத்தி கதையை கொண்டு செல்லும் படங்களில் நடித்து ரசிக்க வைத்தார். சினிமா பின்புலம் இருந்து சினிமாவில் அறிமுகமானாலும் தன்னை யார் என்று சினிமா துறையில் நிரூபித்துக்காட்டியுள்ளார் KARTHI.
சினிமாவில் மட்டுமல்ல சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட கார்த்தி “மக்கள் நல மன்றம்” மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]