2019 ஆம் ஆண்டில் வெளியான கைதி படம் தமிழ் திரையுலகில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறை வைக்கப்பட்டுள்ள ஒரு மனிதன், வெளிவந்த பின்னர் ஒரு இரவில் நிகழும் அதிரடி சம்பவங்கள், உணர்வுப்பூர்வமான திருப்பங்கள் என படம் முழுவதும் பரபரப்பான அதிரடி சம்பவங்கள் இருக்கும். இந்த படத்தின் இறுதியில், டில்லியின் கதை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. அதனால் தான், ரசிகர்கள் ‘கைதி 2 (Kaithi 2)’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு செலுத்தினர்.
Read More: Rolex நல்லவரா? கெட்டவரா? சூரியா சொன்ன பதில்!
DILLI RETURNS
— Karthi (@Karthi_Offl) March 15, 2025
Let it be another fantastic year @Dir_Lokesh@DreamWarriorpic @KvnProductions pic.twitter.com/sLLkQzT0re
அதற்கு பதிலடியாக தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘கைதி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, கைதி 2 உறுதியாகிவிட்டது. இந்த அறிவிப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், இதுவரை பரவிய அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி மீண்டும் டில்லியாக திரும்பவிருக்கிறார். மேலும், இப்படத்தை Dream Warrior Pictures மற்றும் KVN Productions இணைந்து தயாரிக்கின்றனர்.
Read More: 2025ல் மாஸ் காட்டவிருக்கும் நடிகை Trishaவின் திரைப்படங்கள்!
‘கைதி’ மூலம் லோகேஷ் கனகராஜ் தொடங்கிய சினிமாடிக் யுனிவர்ஸ், விக்ரம் (2022) படத்தின் மூலம் மேலும் வலுவடைந்தது. தற்போது, நடிகர் சூர்யாவும் ‘கைதி 2’ படத்தில் நடித்தியுள்ளார் என பரவலாக பேசப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் கடைசி காட்சியில் “ரோலெக்ஸ்” என்ற வில்லன் கதாபாத்திரத்திற்காக வந்த நடிகர் சூர்யா, ரசிகர்களிடம் மாஸான வரவேற்பைப் பெற்றார். இந்த கதாபாத்திரம் கைதி 2-ல் தொடருமா அல்லது புதிய வேடமாக சூர்யா நடிக்கவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


‘கைதி’ படத்தை போலவே நடிகர் கார்த்தியின் மிகப்பெரிய ஹைப்பான திரைப்படமாக கைதி 2 மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் சூர்யா இப்படத்தில் இணைவதால், கதையில் பெரிய திருப்பங்கள் வர வாய்ப்புள்ளது. டில்லி Vs ரோலெக்ஸ் மோதலா? அல்லது வேறு ஒரு புதிய அதிரடி ஆக்ஷன் முறையில் கதையை நகர்த்துவாரா? என்பது ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், இப்படம் 2026 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]