Home Cinema News ரீ-ரிலீஸாகும் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்த ‘பையா’… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!

ரீ-ரிலீஸாகும் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்த ‘பையா’… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!

by Santhiya Lakshmi

பிரபல ஹீரோ கார்த்தி – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பையா’. இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தார்.

இதற்கு பிருந்தா சாரதி வசனம் எழுதியிருந்தார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார், மதி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகி கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படமாக மாறியது.

paiyaa et00004504 1703755753 edited

யுவனின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களுமே ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்ததோடு, அவர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ப்ளேலிஸ்டில் இன்றும் இடம்பெற்றிருக்கிறது.

கடந்த மார்ச் 27-ஆம் தேதி சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மாலை காட்சி மட்டும் இந்த படத்தை திரையிட்டனர். அப்போது,  சென்னையில் உள்ள கமலா சினிமாஸில் ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பை பார்த்து மகிழ்ந்தார் இயக்குநர் லிங்குசாமி. 

தற்போது, உலகமெங்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இயக்குநர் லிங்குசாமியே தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இதனால் கார்த்தியின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.