ஆந்திராவில் திருமலா திருப்பதி கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், நேற்று நடிகர் கார்த்தி விளையாட்டாய் லட்டு பற்றி சொன்ன கருத்து இன்று வினையாக வந்து முடிந்துள்ளது.

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்‘ படத்தை promote செய்ய ஆந்திர மாநிலத்துக்கு சமீபத்தில் படக்குழுவுடன் சென்றிருந்தார். அப்போது அவர் நடித்த ‘சிறுத்தை’ படத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற Meme காட்டப்பட்டு, விளையாட்டாக “லட்டு வேண்டுமா சார்” என கேட்டார்கள். அதற்கு நடிகர் கார்த்தி “லட்டு பற்றி நான் பேச விரும்பவில்லை. அது ஒரு Sensitive Topic” என கூறினார்.
#Meiyazhagan / #SathyamSundaram star #Karthi apologies to #PawanKalyan.
— Cinemania (@CinemaniaIndia) September 24, 2024
“Dear #PawanKalyan sir, with deep respects to you, I apologize for any unintended misunderstanding caused. As a humble devotee of Lord Venkateswara, I always hold our traditions dear. Best regards.”
At an… pic.twitter.com/cycZTCbsOy
Source : X (CineManiaIndia)
இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் அவர்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்கள் இந்த திருப்பதி லட்டு பற்றிய சர்ச்சையை நகைச்சுவையாக எடுத்துக்கக்கூடாது என்றும், சனாதன தர்மம் என்பது நகைச்சுவையான விஷயம் இல்லை என கண்டித்துள்ளார்.
இந்த செய்தியை கேட்டறிந்த நடிகர் கார்த்தி, இன்று அவரின் X தளத்தில் நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். “உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஏதேனும் எதிர்பாராத தவறான புரிதல் ஏற்பட்டால் மன்னிக்கவும்” என கூறியுள்ளார். நான் திருப்பதி வெங்கடேஸ்வரரின் பெரிய பக்தன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dear @PawanKalyan sir, with deep respects to you, I apologize for any unintended misunderstanding caused. As a humble devotee of Lord Venkateswara, I always hold our traditions dear. Best regards.
— Karthi (@Karthi_Offl) September 24, 2024
இந்தியளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இப்படியொரு சர்ச்சை நடந்திருப்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒரு நகைச்சுவையான கேள்விக்கு சொன்ன பதிலால், இப்படியான வாக்குவாதங்கள் ஏற்படுவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகிறார்கள்.
Dear @PawanKalyan …It has happened in a state where you are a DCM .. Please Investigate ..Find out the Culprits and take stringent action. Why are you spreading apprehensions and blowing up the issue Nationally … We have enough Communal tensions in the Country. (Thanks to your… https://t.co/SasAjeQV4l
— Prakash Raj (@prakashraaj) September 20, 2024
நடிகரும் அரசியலில் அதீத ஈடுபாடு கொண்டவருமான நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த லட்டு பற்றிய விவகாரத்தில் சிக்கி, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உடன் X தளத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பவன் கல்யாண் மற்றும் கார்த்தி இடையே நடந்த இந்த உரையாடல் இணையதளத்தில் பேசுபொருளாக ஆனது. நகைச்சுவையாக கேட்கப்பட்ட கேள்விக்கு எதார்த்தமான பதிலளித்தார் நடிகர் கார்த்தி என ஒரு பக்கமும், சனாதன தர்மத்தை கட்டி காப்பாற்றுகிறார் பவன் கல்யாண் என்றும் ஒரு பக்கம் பேச தொடங்கினர்.
Dear @Karthi_Offl garu,
— Pawan Kalyan (@PawanKalyan) September 24, 2024
I sincerely appreciate your kind gesture and swift response, as well as the respect you've shown towards our shared traditions. Matters concerning our sacred institutions, like Tirupati and its revered laddus, carry deep emotional weight for millions of…
இதையடுத்து ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிகர் கார்த்திக்கு பதிலளித்து ஒரு பதிவிட்டுள்ளார். இதில் “நீங்கள் இந்த சர்ச்சைக்கு உடனடியாக பதிலளித்ததற்கும், நம்முடைய மரபுகளை மதிப்பதையும் நான் பாராட்டுகிறேன்” என பதிவிட்டார்.

மேலும் ஒரு நடிகராக நடிகர் கார்த்தியின் மீது மரியாதையை வைத்திருப்பதாகவும், ‘மெய்யழகன்’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூரியாவை tag செய்து வாழ்த்தினார். இதற்கு நடிகர் சூரியா மற்றும் கார்த்தி வாழ்த்தியதற்கு நன்றி என comment செய்தனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]