Home Cinema News சூர்யாவின் 44-வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்… வைரலாகும் மிரட்டலான போஸ்டர்!

சூர்யாவின் 44-வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்… வைரலாகும் மிரட்டலான போஸ்டர்!

by Sivaanantham RB

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் கைவசம் ‘கங்குவா‘ மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவின் படம் என மூன்று படங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் ‘கங்குவா’ படத்தை இயக்குநர் சிவாவும், ‘வாடிவாசல்’ படத்தை இயக்குநர் வெற்றிமாறனும் இயக்குகின்றனர்.

‘கங்குவா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க தாமதமாகுமாம்.

இந்நிலையில், சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளாராம்.

இது சூர்யாவின் கேரியரில் 44-வது படமாம். இந்த தகவலை சூர்யாவே தனது எக்ஸ் தளத்தில் ஒரு மிரட்டலான போஸ்டரை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகப்போகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்‘ நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.