இந்த ஆண்டில் நடிகர் Suriya-வின் பட வரிசையில் Suriya 44 படத்தின் கதாநாயகி இவர் தான்!

Suriya 44- நடகர் சூர்யா 2024ல் அயராது நடித்து வருவது அவரின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை வைத்தே தெரிகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து, அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் சூர்யா.

இந்த வருடம் புதிய கதாப்பாத்திரங்கள், புதிய இயக்குனர்கள் என நடிகர் சூர்யா எப்போதும் போல தனித்துவமாக செயல்பட்டு வருகிறார். புதிய கதாநாயகிகளுடனும் தனது இரண்டு படங்களிலும் இணைகிறார் நடிகர் Suriya. ‘கங்குவா’ படத்தில் ஹிந்தி நடிகை தீஷா பாட்னி உடன் நடிக்கிறார். இவரை தமிழ் ரசிகர்கள் எம் எஸ் தோணி படத்தில் பார்த்திருப்பார்கள். இதை தொடர்ந்து Suriya 44 படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி, பூஜா ஹெக்டே என்ற தகவலையும் படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2022ம் ஆண்டு நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கடைசியாக பார்த்திருப்போம். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியாக இருந்த பூஜா ஹெக்டே, தற்போது முதல் முறையாக நடிகர் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிக்க உள்ளார். பெயரிடப்படாத Suriya 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த ஆண்டு புது ஹீரோயின்களுடன் களமிறங்கும் நடிகர் சூர்யா, இரண்டு படங்களும் வெற்றி அடைய போகிறாரா? அடுத்தடுத்து படங்களில் இவரின் நடிப்பை காண ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு ‘ஜெய் பீம்’ படத்தை போல ஒரு நல்ல ஹிட் கெடுப்பார் என நம்பலாம். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடி உள்ளது, கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய வின்டேஜ் வெஸ்டர்ன் பட பாணியில் சூர்யாவை இயக்குவார் என்றும் தெரிகிறது.
இன்றுதான் முதல்முறையாக பூஜே ஹெக்டே படப்படிப்பில் கலந்துகொண்டார். பூஜா ஹெக்டே – சூர்யா பாடல் காட்சி இன்று படமாக்கப்பட்டிருக்கிறது.
The First Shot….. #Suriya44 #Suriya44FirstShot#LoveLaughterWar ❤️🔥 #AKarthikSubbarajPadam📽️@Suriya_offl @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art @JaikaStunts @PraveenRaja_Off #Jayaram #Karunakaran @2D_ENTPVTLTD… pic.twitter.com/B40aHp9yHt
— karthik subbaraj (@karthiksubbaraj) June 2, 2024
லவ், லாஃப்ட்டர், வார் என்கிற தீமை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதனால் காதல், காமெடி, போர்க்கலகம் மூன்றுமே படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
Suriya 44 Cast & Crew Details
- Hero – Suriya
- Heroine – Pooja hedge
- Music Director – Santhosh Naryanan
- Director: Karthik Subburaj
- Production – 2D Entertainment
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]