நடிகர் கவின் புது இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘Bloody Beggar’ படத்தின் முதல் பாடலான ‘நான் யார்’ தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் புதிதாக தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனமான Filament Pictures, இந்த படத்தை தயாரித்துள்ளது.

பெரும்பாலும் வளர்ந்து வரும் புது முகங்களுடன் நடித்துவரும் நடிகர் கவின், ‘Bloody Beggar‘ படத்திலும் பல புதிய திறமைகள் உடன் பணியாற்றியுள்ளார். இப்படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார். மேலும் இன்று வெளியாகியுள்ள முதல் பாடலை புது பாடகர் RK ஹரி பிரசாத் ரமணி என்பவர் பாடியுள்ளார்.
முற்றிலும் Jazz மற்றும் Retro பாடலாக உருவாகியுள்ள ‘நான் யார்’, இப்படத்தின் ப்ரோமோ பாடலாக உருவாகியுள்ளது. இதை இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.இப்பாடலுக்கு Choreograph செய்துள்ளார் நடன கலைஞர் Sandy மாஸ்டர்.
Bloody Beggar…Nelson தயாரிப்பில் Kavin நடிக்கும் படத்தின் ஸ்பெஷல் என்ன?
‘ப்ளட்டி பெக்கர்’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பொது வெளியான பாடல் படத்தின் theme அல்லது கதைக்களத்தை பற்றிய சிறு முன்னோட்டமாக தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]