Home Cinema News Bloody Beggar…Nelson தயாரிப்பில் Kavin நடிக்கும் படத்தின் ஸ்பெஷல் என்ன?

Bloody Beggar…Nelson தயாரிப்பில் Kavin நடிக்கும் படத்தின் ஸ்பெஷல் என்ன?

Nelson இயக்கி Kavin நடிக்கும் Bloody Beggar படத்தை வெறும் 46 நாட்களுக்குள் இயக்கி முடித்திருக்கிறார் சிவபாலன்.

by John Kamalesh

Filament Pictures என்கிற பெயரில் இயக்குநர் Nelson தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார் என்கிற செய்தி வெளியானதும் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்கிற எக்ஸ்க்ளூசிவ் செய்தியை kollywoodglam.com தளத்தில் அப்போதே வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருக்கிறார் நெல்சன்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நான்கு படங்களை இயக்கிமுடித்திருக்கும் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது Filament Pictures பிக்சர்ஸின் முதல் படத்தை ஜெயிலர் உள்பட அவரது பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் இயக்குறார். 

விஜய் டிவியில் நெல்சனுக்கு அறிமுகமான கவின் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் தற்போது ஹீரோவாக நடித்துமுடித்திருக்கிறார் கவின். இந்தப்படம் அடுத்தவாரம் மே 10-ம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் கவின் ஹீரோவாக நடிக்கும் Bloody Beggar படத்தின் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. 

Bloody Begger

நெல்சனின் வழக்கமான நக்கல் பாணியில் ரெடின் கிங்ஸ்லியுடன் சேர்ந்து ஒரு யூ-ட்யூப் வீடியோவையும் வெளியிட்டு Bloody Beggar படத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.Bloody Beggar படத்தை வெறும் 46 நாட்களுக்குள் இயக்கி முடித்திருக்கிறார் சிவபாலன். படத்துக்கான ஆர்வம் இப்போதே பற்ற ஆரம்பித்திருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.