Home Cinema News Kavin நடிக்கும் மாஸ்க் படத்தின் கதாநாயகி இவர் தான்! 

Kavin நடிக்கும் மாஸ்க் படத்தின் கதாநாயகி இவர் தான்! 

நடிகர் Kavin அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் படத்தில் நடிக்கிறார். இதில் தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். 

by Vinodhini Kumar

Kavin இந்த வருடம் பல படங்களில் கமிட்டாகி உள்ளார், இதற்கு காரணம் ‘ஸ்டார்’ படத்தில் அவருடைய தேர்ச்சியான நடிப்பு தான். அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ‘மாஸ்க்’ என தலைப்பிட்டு படத்தின் பூஜை முடிந்தது. 

Kavin and Mask movie crew

மாஸ்க் படத்தின் பூஜையில் நடிகை ஆண்ட்ரியா, இயக்குனர் விக்ரனன் அசோக், தயாரிப்பாளர் வெற்றிமாறன் என பலர் கலந்துகொண்டனர். கதாநாயகி ருஹானி ஷர்மா படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை. இந்த படத்திற்கு இசை ஜி. வி. பிரகாஷ் அமைக்கிறார். தற்போது வெளியான தகவல்படி நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக தெரிகிறது. 

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை குரோம்பேட்டில் தொடங்கியது. நடிகர் கவினின் மற்ற படங்களை போல் இதுவும் ஆங்கில பெயராக அமைந்து நான்கு எழுத்து ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை பற்றி தகவல் வரவில்லை ஆனால் புதுமுக இயக்குனர் என்பதால் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்திருப்பார் என்பது நிச்சயம். 

நடிகர் Kavin வரிசையாக நெல்சன் திலிப் குமாருடன் ‘Bloody Beggar’, படம் இயக்குனர் சதீஷ் உடன் ‘Kiss’ படத்திலும் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.