Home Cinema News சின்னத்திரை டு சினிமா… Kavin’ன் கனவு ‘Star’ ஜொலிக்குமா?!

சின்னத்திரை டு சினிமா… Kavin’ன் கனவு ‘Star’ ஜொலிக்குமா?!

தோல்வியைக் கடந்து காதலில் வெற்றிபெற்றாரா என்பதுதான் 'Star' படத்தின் கதை எனச் சொல்லாமல் சொல்கிறது ட்ரெய்லர்.

by Santhiya Lakshmi

சின்னத்திரை மூலம் சினிமாவுக்குள் வந்து ‘Star’ அந்தஸ்துக்கு உயரக்கூடிய தகுதிக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்ட  சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் இணைந்திருக்கிறார் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்குள் நுழையும் என்ட்ரி கார்டை வாங்கினார். 

இதற்கு முன்பு சினிமாவில் நடித்திருந்தாலும் கடந்த ஆண்டு வெளியான ‘டாடா’ படம்தான் இவரை நம்பி சினிமாவில் பணம் போடலாம் என்கிற நம்பிக்கையை தயாரிப்பாளர்களிடம் விதைத்தது. அந்த நம்பிக்கைதான் இன்று ‘ஸ்டார்’ என்கிற படமாக படர்ந்து நிற்கிறது.

‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்க்த்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கவின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘ஸ்டார்‘ படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?!

Star Movie release date

மலையாள நடிகர் லாலின் பின்னணிக் குரலுடன் தொடங்குறது படத்தின் ட்ரெய்லர். நடிப்புனா எல்லாத்தையும் மறக்கடிக்கிறதுதான் என்கிறார் லால். படக் கதையின்படி லால், கீதா கலாசம் இருவரும் சின்ன லெவல் நடிகர்கள். இவர்களின் மகனான கவினை அப்பா லால் பெரிய நடிகனாக உருவாக்க ஆசைப்பட, அம்மா கைலாசமோ ”எங்கள மாதிரி நிலையான வருமானம் இல்லாம கஷ்டப்படாத” என எதிர்க்கிறார். இதற்கிடையே நடிப்புக்கான வாய்ப்பைத்தேடி அலையும் கவின் நிராகரிப்புகளை சந்திக்கிறார். இதற்கிடையே சொல்லவே வேண்டாம்… காதல் தோல்வியையும் சந்திக்கிறார். நிராகரிப்பைத் தாண்டி நடிகனாக உயர்ந்தாரா, தோல்வியைக் கடந்து காதலில் வெற்றிபெற்றாரா என்பதுதான் ‘ஸ்டார்’ படத்தின் கதை எனச் சொல்லாமல் சொல்கிறது ட்ரெய்லர்.

Kavin star movie

கவினின் ஸ்டார் திரைப்படம் மே 10-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகயிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.