Home Cinema News ‘BIGG BOSS’ கவின் – இளன் கூட்டணியில் ரெடியாகியிருக்கும் ‘STAR’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘BIGG BOSS’ கவின் – இளன் கூட்டணியில் ரெடியாகியிருக்கும் ‘STAR’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

இளன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB

கோலிவுட்டின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ‘பிக் பாஸ்’ கவின் நடிப்பில் கடைசியாக வெளியாகி வேற லெவல் ஹிட்டான படம் ‘டாடா’. இதனைத் தொடர்ந்து கவின் நடித்திருக்கும் அடுத்த படம் ‘ஸ்டார்’ என்பதால், இதன் மீது ஆடியன்ஸின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ புகழ் இயக்குநர் இளன் தான் இயக்கியிருக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன் என 2 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

மேலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் லால், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தை வருகிற மே 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் சேர்ந்து ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கு 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார், எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.