Home Cinema News ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் கவினின் ‘ஸ்டார்’ படத்தின் ‘விண்டேஜ் லவ்’ பாடல் வீடியோ!

ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் கவினின் ‘ஸ்டார்’ படத்தின் ‘விண்டேஜ் லவ்’ பாடல் வீடியோ!

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ‘பிக் பாஸ்‘ கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாடா’ திரைப்படம் ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கி சூப்பர் ஹிட்டானது. 

தற்போது, கவின் நடித்திருக்கும் புதிய படம் ‘ஸ்டார்’. இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ புகழ் இயக்குநர் இளன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன் என இரண்டு ஹீரோயின்ஸாம்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் லால், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார், எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் – ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘விண்டேஜ் லவ்’ பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.