நடிகைகள் குறித்த வதந்திகளும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கிசுகிசுக்களும் எப்போதும் வந்த வண்ணமாகவே இருக்கும். அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷும் விலக்கல்ல. பல சமயங்களில் அவரின் திருமணம் குறித்த பல்வேறு விதமான வதந்திகள் வெளியாகி அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. தற்போது மீண்டும் அவரின் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது, ஆனால் இந்த முறை சற்று தீர்க்கமான செய்தியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான Keerthy Suresh தனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் இருந்தும், ஊடகங்களில் இருந்தும் விலக்கியே வைத்துள்ளார். அதனால் அவரின் திருமணம், boy friend குறித்த செய்திகள் யூகத்திலேயே கூறப்பட்டு வந்தது.

அப்படி யுகத்தில் கூறப்பட்ட நபர்கள், நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், மற்றும் கீர்த்தி சுரேஷின் நண்பர் பர்ஹான். பல முறை இந்த வதந்திகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பதில் கூறுவதை தவிர்த்து வந்தார் நடிகை Keerthy Suresh.
Podcast-ல் உறுதி செய்தார்
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக SS மியூசிக் youtube சேனலில் தனது “ரகு தாத்தா” திரைப்படத்தின் promotion பொழுது வெளியான podcast ஒன்றில் தான் single இல்லை என்பதை உறுதி செய்தார் நடிகை கீர்த்தி.
தொகுப்பாளர் : என்னைக்காவது தனியா இருக்கோம் single-ஆ இருக்கோம்ன்னு feel பண்ணது இல்லையா?
கீர்த்தி சுரேஷ் : Single இருக்கோம்ன்னு நான் சொல்லவே இல்லையே?
அதன் பிறகு அந்த நபர் யாராக இருக்கக்கூடும் என்று கிசுகிசு பரவ தொடங்கியது.
டிசம்பரில் திருமணம்?
இரண்டு நாட்களாக சமூக வலைத்தளம் மற்றும் செய்தி நாளிதழ்களில் நடிகை Keerthy Suresh திருமணம் செய்து கொள்ளப்போகும் நாள் மற்றும் மாப்பிள்ளையின் பெயரும் உறுதியாக கூறப்பட்டு வருகிறது. நடிகை கீர்த்தியின் நீண்ட கால பள்ளி பருவ காதலன் என்று கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த ஆண்டனி தட்டில் தான் மணமகன் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாயில் பிசினஸ் செய்து வருகிறார். கொச்சியை பிறப்பிடமாக கொண்ட ஆண்டனி துபாயில் சொந்தமாக resort-உம், சென்னையில் இரண்டு கம்பெனிகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பதினைந்து வருட பால்ய காதலனை தற்போது இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள போகிறார் Keerthy Suresh.
இந்த “destination wedding” கோவாவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், டிசம்பர் 9ஆம் தேதி திருமணத்தின் photoshoot தொடங்க உள்ளதாகவும், அதன் பிறகு மூன்று நாள் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி வரை அவர்களின் திருமண வைபோகம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நடிகர் விஜய், நானி, அட்லீ, சிரஞ்சீவி, மற்றும் வருண் தவான் வருகை தரவுள்ளதாக அறியப்படுகிறது.
ஆனால் அதிகாரபூர்வமாக நடிகை கீர்த்தி சுரேஷ் இதை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை, இந்த செய்திகளுக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]