Home Cinema News 2024 கீர்த்தி சுரேஷ்க்கு குவியும் படங்கள்!

2024 கீர்த்தி சுரேஷ்க்கு குவியும் படங்கள்!

2024‌, Keerthy Suresh ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. தொடர்ச்சியாக வரும் பட‌ வாய்ப்புகள்!

by Vinodhini Kumar

2024‌, Keerthy Suresh ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ்க்கு பட‌ வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தொடர்ந்து வெற்றி கண்டு இப்போது ஹிந்தியில் அறிமுகமாகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் இந்த வருடம் வரப்போகும் படங்களின் பட்டியலை பார்ப்போம். அவரது திரை பயணத்தின் தொடக்கத்தில் எவ்வளவோ சறுக்கல்கள், கேளிக்கைகள் சந்தித்திருந்தாலும் தனது நடிப்புத் திறன் மீது நம்பிக்கை வைத்து தேசிய விருதை தட்டி சென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த இரண்டு வருடங்களாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் வித்தியாசம் காட்டி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். 2024ம் கீர்த்தி சுரேஷ்க்கு அப்படியே அமைந்திருக்கிறது ஆச்சரியம் இல்லை.

Keerthy Suresh Movies

ரகு தாத்தா (2024) 

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.‌ எஸ். பாஸ்கர் நடித்துள்ள படம் ‘ரகு தாத்தா’. ஹிந்தி திணிப்புக்கு எதிராக குறள் கொடுக்கும் இளம்பெண் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இல்லை. மொழி அரசியல் பற்றி பேசும் படமாக தெரிந்தாலும், நகைச்சுவையான குறும்பான இளம்பெண் பாத்திரத்தில் நடித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Movies

ரிவால்வர் ரீட்டா (2024) 

காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இயக்கப்பட்டுள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி நடித்துள்ளனர். இதுவரை மிக சில படங்களில் மட்டுமே ஆக்ஷன் நாயகியாக கீர்த்தி சுரேஷ்-ஐ பார்த்து இருப்போம். பெயருக்கு ஏற்றவாறு இந்த படத்தில் தைரியமான புதிய பாத்திரமாக இருக்கும் என்ற‌‌ ஆவல் உள்ளது.படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்கள். ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. 

Keerthy Suresh Movies

பேபி ஜான் (2024) 

2024ல் பாலிவுட்டில் கால் பதிக்கும் கீர்த்தி சுரேஷ், வருண் தவன் உடன் இணைகிறார். தமிழில் வெளியான ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ல், சமந்தா நடித்த வேடத்தை ஏற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஏமி ஜாக்சனின் பாத்திரத்தில் வாமிகா காப்பி நடித்துள்ள தாகவும் தகவல். இப்போது படப்பிடிப்பு முடிந்து மே 31 வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. 

Keerthy Suresh Movies

கண்ணிவெடி (2024) 

புது இயக்குனர் கணேஷ் ராஜின் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ள படம், கீர்த்தி சுரேஷ், வீ ஜெ ரக்ஷன் நடிக்க உள்ளார்கள். படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு முடிவு செய்யாத நிலையில், படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. ‌

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.