சமீப காலமாக மலையாள படங்களுக்கான வரவேற்பு பெருகி வந்த நிலையில் அது ஒட்டுமொத்தமாக மாற்றக்கூடிய வகையில் வந்துள்ளது Justice Hema Committee-ன் ரிப்போர்ட். இந்த கமிட்டியில் Justice ஹேமா, நடிகை சாரதா, முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரியான வல்சலா குமாரி ஆகியோர் உள்ள இந்த கமிட்டி 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மூலமாக நடிகைகள் மட்டுமல்லாது சினிமா துறையில் உள்ள மற்ற பெண் கலைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆன கழிப்பறை, உடை மாற்றும் இடம், போக்குவரத்து, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தங்குவதற்கு இடம் என எந்த ஒரு அடிப்படை வசதியும் பெரிதாக வழங்கப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளனர். நடிகைகள் திரைத்துறையில் தங்கள் கனவுகளை நிறைவேற்ற உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விதமான இன்னல்களைத் தாண்டி வர வேண்டிய நிலையில் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
இந்த செய்தி வெளியானதில் இருந்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில். நடிகை குஷ்புவும் கமிட்டியின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்து தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
“ஒரு பெண்ணாகவும், தாயாகவும் இத்தகைய வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் சதையில் மட்டும் அல்ல, ஆன்மாவிலும் ஆழமாக வெட்டப்படுகின்றன. இந்த மிருகத்தனமான செயல்கள் நமது நம்பிக்கை, வலிமை, அன்பு ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்கிவிடுகின்றன. ஒவ்வொரு தாய்க்கு பின்னால் ஒரு நம்பிக்கை இருக்கிறது, அது அவர்களை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் உதவுகிறது. அந்த புனிதம் மொத்தமாக உடையும் பொழுது எல்லோரையும் சிதைத்துவிடுகிறது”
அதோடு தனது தந்தையால் சிறு வயதில் உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளானதையும் கூறியிருக்கிறார். அன்பு கரங்கள் நீட்டி காப்பாற்ற வேண்டிய நபரால் இவ்வாறு நேரும் பொழுது எப்படி வெளியே கூறுவது என்று கூறியிருக்கிறார். இப்படி எல்லாத் துறைகளிலும் பெண்கள் சமரசம் செய்து தான் தங்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய நிலை எதற்க்காக உள்ளது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
“அங்குள்ள அனைத்து ஆண்களுக்கும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆணும் நம்பமுடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்கு பிறந்தான். பல பெண்கள் உங்கள் வளர்ப்பில் இன்றியமையாத பங்கு வகிக்கிறார்கள், இன்று நீங்கள் இருக்கும் நபராக உங்களை வடிவமைக்கிறார்கள் – உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள்.
இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுரண்டல் இத்துடன் நிறுத்தப்படட்டும். பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு எப்போதும் ஒரு தேர்வு இருக்கும். உங்கள் NO கண்டிப்பாக NO ஆகும். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒருபோதும் சரிசெய்யவோ அல்லது சமரசம் செய்யவோ வேண்டாம். எப்போதும். இதை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நான் நிற்கிறேன். ஒரு தாயாகவும் பெண்ணாகவும்”
இவ்வாறு நடிகையும் Khushbu தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
💔 This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]