மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கும் கலை வடிவில் மிகவும் முக்கியமான ஒன்று “இசை”. பயம், சோகம், சந்தோஷம், இயலாமை, அழுகை, காதல், தாய்மை என மனிதன் உணரும் எல்லா வகையான உணர்ச்சிகளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. பிறக்கும் தருணத்திலிருந்து இறுதி ஊர்வலம் வரை நம்மோடு பயணிக்கும் இந்த அற்புதம் மிகுந்த கலையை தனது திறமை மற்றும் அனுபவத்தின் முயற்சியால் காலம் தாண்டி ஒலிக்கும் ‘அமுத கீதம்’ படைப்பதில் வல்லுநர்களாகப் பல கோலிவுட் இசையப்பரிப்பாளர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல Hollywood திரைப்படங்களிலும் பின்னணி இசை அமைத்து சாதனை படைத்துள்ளனர். இசைஞானியில் தொடங்கி தற்போது உள்ள ராக்ஸ்டார் அனிருத் வரை பின்னணி இசை அமைத்த Hollywood திரைப்படங்களை காணலாம்.
இசைஞானி இளையராஜா
இசைஞானி, Maestro என்ற பட்டங்களுக்கு தகுதியான இளையராஜா அவர்கள் 1976-ல் “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அவர் வருகைக்கு முன் கர்நாடக சங்கீதம் பெருவாரியாகத்தமிழ் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. “அன்னக்கிளி” படத்தில் பயன்படுத்தப்பட்ட நாட்டுப்புற இசை மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் கலவை பட்டித்தொட்டி எங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.
அன்று தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் பயணம் பல வருடங்கள் தாண்டி இன்றும் இவர் இசை மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முழு symphony இசையை இசையமைத்த முதல் தெற்காசிய இசையமைப்பாளர் ஆகும். 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார், இந்திய சினிமாவில் கணிணி மூலம் பாடல் மற்றும் பின்னணி இசையை ஒலிப்பதிவு செய்த முதல் இசையமைப்பாளர் என்று இவரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற இந்திய மொழி படங்களுக்கு எண்ணற்ற பாடல்களை வழங்கிய இசைஞானி Hollywood திரைப்படமான “Love & Love Only” என்ற ஆங்கில மொழி ஆஸ்திரேலிய திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். 2015-ல் இந்திய வம்சாவளியில் பிறந்த இயக்குநர் ஜூலியன் கரிகாலன் இயக்கத்தில் ரோஹித் காலியா மற்றும் ஜார்ஜியா நிக்கோலஸ் நடிப்பில் இந்த படம் வெளியானது.இது தான் இசைஞானி இளையராஜா பணியாற்றிய முதல் ஆங்கிலத் திரைப்படம் ஆகும். அதன் பிறகு யாரும் எதிர்ப்பாராத ஒரு நிகழ்வாக அமைந்தது தான் “Strangers Things” வெப் தொடரில் இசைஞானியின் இசை.
Indian Cinema-விற்கு உலகநாயகன் அறிமுகப்படுத்திய “Technologies”
2016-ல் Netflix நிறுவனம் வெளியிட்ட பிளாக்பஸ்டர் வெப் தொடர் தான் “Stranger Things” மொத்தம் 5 சீசன் வெளியாகி அடுத்து 6 வது சீசனும் வெளியாக உள்ள நிலையில், அதில் நமது இசைஞானியின் பங்கு இருந்ததை பலரும் அறிய வாய்ப்புகள் குறைவு. 2022-ல் வெளியிடப்பட்ட 4வது சீசனை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்திய “Stranger Things” spoof எடுக்கப்பட்டு அதற்கு நமது இசைஞானி இளையராஜாவும் பின்னணி இசையில் தனது பிரம்மாண்டத்தை காட்டியிருப்பார். சாதனை புரிவதற்கு மொழியோ, வயதோ ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
1970-வதுகளில் இருந்து 90 வரை மிகப்பெரிய ஆளுமையாக வளம் வந்த இசைஞானிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் தந்தை ஆர்.கே.சேகர் அவர்கள் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். keyboard வாசிக்க தொடங்கிய ரஹ்மான் அவர்கள், பிற இசையமைப்பாளர்கள் உடன் இணைந்து Keyboard பிளேயர் ஆக பணியாற்றி வந்தார். அதில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, விஜய பாஸ்கர், ரமேஷ் நாயுடு, குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1992-ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் என்ற புது அவதாரம் எடுத்தார். ஆசியாவிலேயே உயர்தர தொழில்நுட்பங்களை கொண்ட ஸ்டூடியோவாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோ இருந்தது. “ரோஜா” திரைப்படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும் பெற்றார்.

90-களில் பிரபலமாக இருந்த பாப் மற்றும் மேற்கத்திய இசையை தனது இசையில் புதுமையாக வடிவமைத்து அதில் பல விதங்களை அவர் பணியாற்றிய அடுத்தடுத்த படங்களில் காண்பித்தார். தமிழில் இருந்து ஹிந்தியில் பணியாற்றி அதன் பிறகு பிற மொழிகளிலும் பணியாற்றினார். 2008-ல் வெளியான “Slumdog Millionaire” என்ற ஆங்கில திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு நடந்த Oscar Awards-ல் சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய இரு வகைகளில் இரண்டு Academy விருதுகளை வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தார். விருது வாங்கிய மேடையில் அவர் கூறிய “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற வாக்கியம் தமிழுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பெருமை கொள்ளும் தருணமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற “ஜெய் ஹோ” பாடல் இன்றுவரை பலரின் playlist-ல் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.
இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதை வென்ற முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என்பதால் அவர்களை “ஆஸ்கார் நாயகன்” என்றும் சினிமா வட்டாரங்களில் அழைப்பது உண்டு.
ஹிப்ஹாப் தமிழா ஆதி
எந்த ஒரு இசை பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியால் தமிழ் Rap பாடகராக தனது இசை பயணத்தை தொடங்கினார் ஹிப்ஹாப் ஆதி. முதலில் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால், வைபவ், சதீஷ் நடிப்பில் 2015-ல் வெளியான “ஆம்பள” திரைப்படம் தான் இசை அமைப்பாளராக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் ஆகும். இவரின் இசை ஸ்டைல் இந்திய இசையையும், ஹிப் ஹாப்பையும் இணைத்து உருவான ஒன்றாக இருக்கும். தனது இசை பயணத்திற்கு உந்து கோலாக இருந்தது பாரதியார் கவிதைகள், பாப் பாடல்களின் மன்னன் ஆக கருதப்படும் மைக்கேல் ஜாக்சன், மற்றும் அமெரிக்க rapper ஆன Jay-Z என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
2013-ல் வெளியான அமெரிக்க fantasy காமெடி படமான “The Smurfs 2” திரைப்படம் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் வெளியானது. இந்தியாவில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பாடலை ஹிப்ஹாப் ஆதி கம்போஸ் செய்தார். “Na Na Na (Nice vs Naughty)” என்ற பாடலை 2013-ல் Indian Idol Junior என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற 9 போட்டியாளர்களுடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி பாடியுள்ளார்.
‘இதயம்’ முரளியின் மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ – Teaser வெளியானது!
இசைக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றொரு நிகழ்வாக 2009-ல் பிரான்சில் நடந்த “Cannes Golden Lion” விருதை 2008-ல் வெளியான “காதலில் விழுந்தேன்” திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாக்கு முக்க’ பாடலுக்காக சிறந்த இசை என்ற category-யில் கொடுக்கப்பட்டது. இந்த விருதை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவர். Hollywood திரைப்படத்தில் இசை அமைக்கவில்லை என்றாலும் தனது இசையை உலக அளவிற்கு கொண்டு சென்று தென்னிந்திய இசைக்கு பெருமை சேர்த்து உள்ளார். வரும் காலங்களில் தற்போது இருக்கும் பல இசை கலைஞர்களுக்கு இந்த நிகழ்வுகளும், சாதனைகளும் மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]