PS வினோத்ராஜ் இயக்கத்தில் 2021-ல் வெளியான ‘Pebbles – கூழாங்கல்’ திரைப்படம் திரை துறை வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பும் பாராட்டும் பெற்றது. இரண்டு வருடம் கழித்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் “கொட்டுக்காளி” திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் நுட்பமான மேக்கிங் மற்றும் அதில் வரும் அழுத்தமான கதாபாத்திரம் இன்றுவரை பாராட்டுக்களை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். ஏற்கனவே மூன்று சர்வதேச விருதுகளை வென்ற நிலையில் தற்போது ரஷ்யாவில் வழங்கப்படும் “GRAND PRIX AWARD”-யையும் இந்த திரைப்படம் வென்றுள்ளது.
சர்வதேச விருதுகளை குவித்த ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் வெளியானது!
தமிழ்நாட்டில் திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பு பிப்ரவரி 16 ஆம் தேதி 2024 அன்று, “74th Berlin International Film Festival”ல் முதன் முறையாக திரையிடப்பட்டது. நடிகர் சூரிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படும் இரண்டாவது திரைப்படம் ஆகும்.
சர்வதேச விருது | இடம் |
Special Jury Award – Transilvania International Film Festival (TIFF) | ரோமானியா |
Golden Apricot Award | அர்மேனியா |
Golden Lynx Award | போர்ச்சுகல் |
Grand Prix Award | ரஷ்யா |
இந்த மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிரும் விதமாக இயக்குனர் வினோத் ராஜ் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொட்டுக்காளி’ படத்துக்கு கிடைக்கும் எதிர்ப்பு ஏன்? இந்த படத்தை திரையிட்டது தவறா?
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]