நடிகர் சூரி, ஆனா பென் நடிப்பில் இந்தாண்டு பெருவாரியான திரைத்துறையினரையும் சினிமா ரசிகர்களையும் பெருமை படுத்தும் விதமாக 2024ன் முதல் பாதியில் பல சர்வதேச விருதுகளை வென்ற படம் தான் ‘கொட்டுக்காளி’.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து, ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் காட்சி முடிவில் பலதரப்பட்ட மக்களும் இந்த படத்தை பார்த்து கடுமையாக விமர்சித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இதற்கான காரணங்கள் என்ன? எதிர்ப்பு கதைக்கானதா இயக்கத்துக்கானதா?
இயக்குனர் PS வினோத்ராஜ் தன்னுடைய முதல் படமான ‘கூழாங்கல்’ படத்தை இயக்கியபோதே திரையுலத்தில் உள்ள பெரிய இயக்குனர்களின் பாராட்டுக்கு பத்திரமானவராக உயர்ந்தார். ‘கூழாங்கல்’ படத்தின் இயக்கம் மிக புதுமையாக காணப்பட்டதும், அதை பற்றிய பல கேள்விகளும் எழுந்தது. மிக குறைந்த வசனங்களுடன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நிஜத்தின் நிழலாக எடுத்திருந்தார் வினோத்ராஜ்.
கொட்டுக்காளி படத்தின் இயக்கம்
இன்றும் பல கிராமங்களில் கணவன் அடித்ததால் கோவித்துக்கொண்டு தன்னுடைய பிறந்த வீட்டுக்கு செல்லும் பெண்கள் பலர் உள்ளனர். அதை அடிப்படையாக மட்டுமே எடுக்காமல் கதையாகவே எடுத்து ஒரு கிராமத்து வாழ்வியலையும், அதன் நிலப்பரப்பு பற்றிய படமாக அமைந்தது தான் ‘கூழாங்கல்’.

அதை தொடர்ந்து தற்போது ‘கொட்டுக்காளி’ படத்தையும் அவரின் இயல்பான பாணியிலேயே எடுத்துள்ளார். ‘Travel movies’ அதாவது ஒரு பயணத்தை திரையில் காட்சிப்படுத்தும் படங்கள் தான் வினோத்ராஜ் உடைய ஸ்டைலாக உள்ளது. அனால் இந்த வகையான படங்களை தமிழ் மக்களுக்கு விரும்பும் வகையில் இதற்கு முன்னர் எடுத்துள்ளனர்.
இருந்தும் இப்போது ‘கொட்டுக்காளி’ படத்திற்கு கிடைக்கும் எதிர்ப்பும் விமர்சனகளுக்கும் ஒரு பெரிய காரணமாக அமைந்துள்ளது படத்தின் இயக்கம் இதுவரை பார்க்காத ப்பாணியில் இருப்பது ஒரு பெரிய காரணம். அவரின் கருத்தை மக்களிடம் கொண்டுசேர்க்காமல் மக்களின் எண்ணத்திற்கு விட்டது பின்னடைவு.
பின்னணி இசை மற்றும் பாடல்
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கான இடம் என்பது மிகவும் முக்கியமானது. ‘கொட்டுக்காளி’ படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது. படம் முழுவதும் ‘Sync Sound’ அதாவது படப்பிடிப்பின்போது record செய்த சத்தத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளார்கள். பின்னணி இசையோ பாடல்களோ இல்லாமல் ஏறத்தாழ 2 மணிநேரம் படம் பார்ப்பது சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதையும் திரைக்கதையும்
காதல் திருமணத்தை ஏற்கமுடியாமல் அந்த பெண்ணுக்கு பேய் பிசாசு பிடித்துள்ளது என நம்பும் மக்களும், கிராமத்தில் இன்றளவும் நம்பப்படும் பல மூடநம்பிக்கைகளையும் பற்றி பேசுவதில் இயக்குனர் வினோத்ராஜ் விதிவிலக்கல்ல. சாதியையும், நம்பிக்கையும் பற்றி எடுக்கப்பட்ட இயல்பான படமாக இருந்தாலும் திரைக்கதை என்பது இந்த படத்தில் இல்லாததும் ஒரு பின்னடைவு.
இப்படியான கதையில் சொல்லவந்த கருத்துக்களை தெளிவாக கூறாமல் மக்களை யோசிக்க வைக்கும் எண்ணத்தில் எந்தவித தொடர்பும் இல்லாமல் திரைக்கதை அமைந்தது பெரிய பின்னடைவு. குறிப்பாக எப்படியான படமானாலும் கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லவந்த கருத்துக்களை தெளிவாக சொல்லாமல் மக்களின் கற்பனைக்கு விட்டது பெரிய விமர்சனத்துக்கு வித்திட்டது.
நடிகர்களின் தேர்வு

கொட்டுக்காளி என்றால் அடங்காத பெண் என்ற அர்த்தத்தில் நடிகை ஆனா பென் தன்னுடைய நடிப்பால் நிஜமாகவே பிடிவாதமான முகத்துடன் தீர்க்கமாக நடித்துள்ளார். அதே போல் நடிகர் சூரியும் தன்னை வருத்தி குரலை மாற்றி அருமையாக நடித்துள்ளார். இந்த இருவரை தவிர வேறு எந்த நடிகர்களும் மக்கள் மனதில் நிற்கவில்லை.
மொத்தத்தில் Interpretative cinema என்பதற்கும் திரையரங்கில் கமர்ஷியல் சினிமாவை பார்த்து பழகிய மக்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை இந்த படம் வெளிப்படையாக காட்டியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]