தமிழில் 2021ல் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் சினிமா துறையினர் இடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘கூழாங்கல்’. இயக்குனர் வினோத் ராஜின் முதல் படத்திலேயே பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பினார். அவரின் ‘Kottukaali’ படம் தற்போது 2024ல் பேசு பொருளாக மாறியுள்ளது.

கொட்டுக்காளி படத்துக்கு கிடைக்கும் அங்கீகாரம்
கொட்டுக்காளி படத்தில் நடிகர் சூரி, மலையாள நடிகை ஆனா பென் நடித்துள்ளனர். ஆனா பென்னுக்கு தமிழில் இது முதல் படமாகும், நடிகர் சூரிக்கும் இதுவரை இல்லாத பாத்திரமாக அமைந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கலை அரசு இணைத்து SK புரொடக்சன்ஸ் கீழ் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் உலகளவில் பெரிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது. பிப்ரவரி மாதம் நடந்த 74வது பெரிலின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விமரிசையாக பேசப்பட்டது. தற்போது சமீபத்தில் ரோமேனியாவில் நடந்த ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஸ்பெஷல் ஜூரி ( jury) விருதைப் பெற்றுள்ளது.
I’m very happy that our film #Kottukkaali #TheAdamantGirl has won the Special Jury Award at the Transilvania International Film Festival – @TIFFromania. This recognition means so much to me and our entire team. A huge thank you to the jury and everyone who supported us.… pic.twitter.com/3htxantOqK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 23, 2024
இந்த செய்தியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் X தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் இயக்குனர் வினோத் ராஜ் பழனி, படத்தின் நாயகி ஆனா பென், இணை தயாரிப்பாளர் கலை அரசு பங்கேற்று விருதைப் பெற்றனர்.
Excited to share that #Kottukkaali has been awarded the 'GOLDEN LYNX AWARD' for 'BEST FEATURE FILM' at the 20th FEST – New Directors/New Films International Film Festival (@FESTFestival), Espinho, Portugal 🥳@Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj… pic.twitter.com/BOZ546KKGE
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 1, 2024
போர்சுகல் நாட்டில் ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை நடந்த 20வது FEST சர்வதேச பட விழாவில், ‘Golden Lynx’ விருது ‘கொட்டுக்காளி’ படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த Feature படமாக அங்கீகரிக்கப்பட்டு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த செய்தியை தயாரிப்பாளர் சிவக்கார்த்திகேயன் வலதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Kottukkaali படத்தின் ரிலீஸ் தேதி
Kottukkaali என்றால் அடங்காத பெண் என்ற பொருளில், கீழ் ஜாதியை சேர்ந்த இளைஞரை விரும்பியதால் அவளுக்கு பேய் பிடித்ததாக கருதி அவளை மாற்ற அந்த குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகள் தான் கதைக்களம். இதில் நடிகர் சூரி மற்றும் ஆனா பென்னின் நடிப்புக்கு விமர்சகர்கள் இடையே பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. 28 பிப்ரவரி 2025ல் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
After all the accolades and appreciation from film festivals across the world, we are now bringing it to our audience. #Kottukkaali will be releasing in theatres on August 23.#KottukkaaliFromAug23@Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj @benanna_love… pic.twitter.com/F0cHJgI149
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 23, 2024
கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வீடியோ வழியாக வெளியிட்டது SK ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம். ஆகஸ்ட் 23 கொட்டுக்காளி படம் வெளியாகும் என அந்த பதிவில் வெளியிடப்பதது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]