Home Cinema News சர்வதேச விருதுகளை குவித்த ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

சர்வதேச விருதுகளை குவித்த ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

'கூழாங்கல்' பட இயக்குனர் வினோத்ராஜ் இயக்கியுள்ள 'கொட்டுக்காளி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

2021ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு பேசும்பொருளாக அமைந்த படம் தான் ‘கூழாங்கல்’. தனித்துவமான கதையமைப்பில், புதுமையான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் P. S. வினோத்ராஜ். இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு தக்க பதிலாக ‘கொட்டுக்காளி‘ படத்தை எடுத்துள்ளார். 

‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டு இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்துள்ளது. 

கொட்டுக்காளி poster

வசனங்கள் மிக குறைவாக எழுதி, நமது கிராமங்களின் பரப்பளவு மற்றும் இயற்கையான உணர்வுகளை மேம்படுத்தி எடுப்பது தான் இயக்குனர் வினோத்ராஜின் தனித்துவம். அது இந்த ட்ரைலரில் விளங்குகிறது. 

Kottukkaali படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்! 

இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை ஆனா பென் நடித்துள்ளனர். சாதிய கொடுமை மற்றும் தமிநாட்டின் கிராமங்களின் அறியாமை மற்றும் நம்பிக்கைகளை ஒரு ஆவணப்படம் போல படம்பிடித்து காட்டும் என தெரிகிறது. சேவல் கொக்கரிப்பதை இசையாக அமைத்து, ட்ரைலரில் சிறப்பாக உணர்வை கடத்தியுள்ளார்கள்.

Anna Ben in Kottukkaali

‘கொட்டுக்காளி’ என்றால் அடங்காத பெண் என்ற பொருள். தனது காதலுக்காக பிடிவாதத்துடன் இருக்கும் பாத்திரத்தை தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஆனா பென். இது தமிழில் இவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சூரி இந்த படத்தில் தனது குரலை மாற்றி முழுக்க முழுக்க சீரியசான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு புதுமையான திரைக்கதையில், ‘கூழாங்கல்’ படத்தை போன்ற படைப்பாக இருக்கும் என தெரிகிறது. ஆகஸ்ட் 23 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.