Home Cinema News ‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் character வீடியோ ரிலீஸ்! 

‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் character வீடியோ ரிலீஸ்! 

தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் கதாப்பாத்திர வீடியோ வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப் நடிப்பில் உருவாகும் படம் ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கிவரும் இந்த படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், அவரின் கதாப்பாத்திரத்தை பற்றி ஒரு சிறிய வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் ‘குபேரா’ என்ற தலைப்புக்கு தகுந்தவாறு இரவில் மண்ணில் புதைத்து வைத்துள்ள பெட்டியை ராஷ்மிகா மந்தனா தோண்டி எடுக்கிறார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது. அதை எடுத்து பார்த்து, தொட்டு கும்பிட்டு எங்கோ எடுத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. படத்தின் எல்லா அப்டேட்டிலும் பணம் என்பதை பெரிதாக காட்டி மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளனர் படக்குழு. 

Kubera Rashmika Mandanna

இதற்கு முன் நடிகர் நாகார்ஜூனா உடைய பாத்திரத்தையும் வீடியோவாக வெளியிட்டனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.