இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர் தனுஷ், நடிகர் நாகார்ஜுனா, நடிகை ரஷ்மிகா மந்தனா, நடிகர் ஜிம் சார்ப் ஆகியோரை கொண்டு ஒரு திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். ‘குபேரா’ என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு இந்த படத்தில் பணத்தை முக்கிய கதாபாத்திரத்தை போலவே இதுவரை காட்டியுள்ளனர்.
இன்று இப்படத்தின் ஒரு Glimpse வீடியோ தற்போது வெளியாக, அதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோடு எப்படி பொருந்தபோகிறார்கள், நடிகர் தனுஷ் பிச்சைக்காரராக தோன்றி பின்னர் பட்டு வெட்டி சட்டையில் இருப்பது என இப்போதே படத்திற்கான ஆர்வம் அதிகமாகியுள்ளது.
‘Kubera’ படத்தின் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அணைத்து அறிவிப்புகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மட்டுமே வெளியிட்டு, இப்போது படத்தின் சிறிய முன்னோட்டத்தை காட்டியுள்ளனர்., இதில் நடிகர் நாகார்ஜூனா ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நபரை போல , தனது குடும்பத்துடன் காணப்பட்டார், ஹிந்தி நடிகர் ஜிம் சார்ப் பணக்கார தொழிலதிபராக தெரிய, ரஷ்மிக மந்தனா ஒரு இயல்பான பாத்திரத்தில் வருகிறார். நேர்மை, ஒழுக்கம், வாழ்க்கையின் நோக்கம் ஆகிய கண்ணோட்டத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
A blend of action, drama, and cinematography!
— Mahesh Babu (@urstrulyMahesh) November 15, 2024
All the very best…🙂#KuberaGlimpse https://t.co/TwLo74arko @dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @ThisIsDSP@AsianSuniel #Puskurrammohan @SVCLLP @amigoscreation @KuberaTheMovie
Dhanush நடிக்கும் Kubera- தெலுங்கு நடிகர் Nagarjunaவின் ஸ்டைலான அப்டேட்!
இந்த படத்தின் கதையை பற்றிய எந்தவித குறிப்பும் இந்த glimpse வீடியோவில் இல்லை. ‘குபேரா’ படத்தின் முக்கிய பத்திரமாக இயக்குனர் சேகர் கம்முலா தனுஷை காட்டியிருப்பதும், உண்மையில் கோடிஸ்வரராக அவர் இருக்க வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் பேசப்படுகிறது. இந்த glimpse வீடியோவில் இருந்து இது ஒரு சமூக சிந்தனை கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் என தெரிகிறது. ‘குபேரா’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு மும்பை நகரில் மையமாக நடைபெற்றது, இந்த படத்தை சுனில் நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.