சேகர் கம்முலா இயக்கத்தில், இயக்குனரும் நடிகருமான தனுஷ் நடித்து வரும் புதிய படம் தான் Kubera. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், நாகார்ஜூனா இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், தனுஷ் அப்பாவி போன்ற தோற்றத்தில், வீடில்லாத ஏழை போன்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பணத்தை மையமாக கொண்ட ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kubera releasing on 20th June ☄️ @dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @ThisIsDSP @SVCLLP @amigoscreation @jimSarbh @AsianSuniel pic.twitter.com/5YhxN7IwbQ
— Rashmika Mandanna (@iamRashmika) February 27, 2025
Kubera திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கிடையில் பெரும் எதிர்ப்பாடுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தாராயை மையமாக வைத்து எடுக்கப்படும் Kubera படமானது வரும் ஜூன் 20 ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கான டீஸர் வெளியீடு போன்ற மற்ற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளை களைகட்டும்படி ஓடிக்கொண்டிருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் தனுஷ் நடித்துள்ள படங்கள் தான் இட்லி கடை மற்றும் Kubera. தனுஷின் இயக்கத்தில் வெளியாகும் படங்களும், தனுஷ் நடித்து வெளியாகும் படங்களும் வெற்றி படங்களாக அமைந்து வருவதை தொடந்து, தற்போது இவர் நடித்துள்ள Kubera மற்றும் இட்லி கடை படமும் ரசியகர்களுக்கிடையில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமையும் என எண்ணப்படுகிறது.

தெலுங்கு படங்களில் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் நாகார்ஜூனா Kubera படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை போல், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிரடி கதாநாயகியாக வலம்வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்திலும் ஆக்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் என அவருக்கான முதல் பார்வை வீடியோ மூலம் தெரிகிறது.
Kubera படக்குழு
நடிகர்கள் | தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில், சுனைனா, கௌஷிக் மஹாதா, சவுரவ் குரானா, கோல் ரவி சர்மா. |
இயக்குனர் | சேகர் கம்முலா |
இசையமைப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
தயாரிப்பாளர் | சுனியல் நாரங், புஷ்கர் ராம் மோகன் ராவ். |
வெளியீட்டு தேதி | 20 ஜூன் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]