Home Cinema News “குடும்பஸ்தன்” ஆக மாறும் ‘Lover’ பட மணிகண்டன்!!!!

“குடும்பஸ்தன்” ஆக மாறும் ‘Lover’ பட மணிகண்டன்!!!!

‘Lover’ திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் மணிகண்டன் நடிக்கும் “குடும்பஸ்தன்” படத்தின் first look வெளியானது.

by Shanmuga Lakshmi

சென்ற வருடம் வெளியான “Good Night” திரைப்படத்தை தொடர்ந்து “Lover” திரைப்படத்தின் நடிகர் மணிகண்டன் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. திரைக்கதை எழுத்தாளராக, மிமிக்ரி கலைஞர் ஆக தொடங்கிய இவரின் பயணம் நடிகராக 2015  ஆம் ஆண்டு “இந்தியா பாகிஸ்தான்” திரைப்படத்தில் ஆரம்பம் ஆனது.  முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்த “சில்லு கருப்பட்டி, ஏழே, ஜெய் பீம்” படங்களின் மூலமாக ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தார். 

கதாநாயகனாக களம் இறங்கி 2023-ல் வெளியான “Good Night” மற்றும் 2024-ல்‌ “Lover” ஆகிய இரண்டு திரைப்படங்களும் கதாநாயகனாகவும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் நடிகர் மணிகண்டனுக்கு பெற்றுத் தந்தது. இந்த இரு வேறு கதைக்களங்கள் இவரின் யதார்த்த நடிப்பை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியது. 

 ‘குரங்கு பெடல்’ படத்துக்கு புதுவை அரசு ‘சங்கரதாஸ் சாமிகள்’ விருது வழங்குகிறது! 

தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி cameo-வாக‌ தோற்றம் அளித்த மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குரலை மிமிக்ரி செய்து டப்பிங் கொடுத்தது நடிகர் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் 29 ஆம் தேதி நடிகர் மணிகண்டன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படத்தின் first look போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார். அந்த படத்திற்கு “குடும்பஸ்தன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் “Good Night” திரைப்படத்தை போல family entertainment படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் “Back to School (2018) மற்றும் Alumbunaties (2020)” போன்ற Youtube மினி தொடர்களை இயக்கிய ராஜேஸ்வர் காளிசாமி ஆகும்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.