புது இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் 2023ல் வெளியான படம் ‘குரங்கு பெடல்’. 80களில் நடக்கும் ஒரு மிக எளிமையான கதையை அழகான படமாக காட்டி, அதில் ஒரு அப்பா மகன் இடையே உள்ள உறவை ஆராய்ந்திருப்பார். இந்த படத்துக்கு தற்போது புதுவை அரசு சார்பில் ‘சங்கரதாஸ் சாமிகள்’ விருதை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

காளி வெங்கட், பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், சந்தோஷ் வேல்முருகன் , ராகவன், ரத்தீஷ், சாய் கணேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் கிராமப்புறத்தில் இன்றளவும் நடக்கும் ஒரு கதையை திரைப்படமாக எடுத்திருப்பார் இயக்குனர் கமலக்கண்ணன்.
Kurangu Pedal Review: 90ஸ் கிட்ஸ்களின் கோடை விடுமுறை விருந்து
சைக்கிள் ஓட்ட தெரியாத தந்தை காளி வெங்கட், ஊர் மக்களால் கேலிச்சித்திரமாக பார்க்கப்படுகிறார். ஆனாலும் சைக்கிள் ஓட்ட கத்துக்காமல் காலத்தை தள்ளுகிறார். இவருடைய மகன் அதற்கு எதிர்முனையாக எப்படியாவது சைக்கிள் ஒட்டியே தீருவேன் என முடிவுடன் இருக்கிறான். இவர்களுக்கிடையே நடக்கும் வாக்குவாதங்கள், மனம் மாற்றம் ஆகியவற்றை பேசும் படம் ‘குரங்கு பொம்மை’.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் உடைய தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சிறந்த படத்திற்கான IIFA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இப்பொது புதுச்சேரி அரசு சிறந்த படத்திற்கான விருதை அறிவித்துள்ளது.
‘குரங்கு பெடல்‘ படத்தை திரையிட்டு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த படத்தை Aha OTT தளத்தில் பார்க்கலாம். நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இதுபோன்ற புது இயக்குனர்கள் படங்களை தயாரித்துவருவதும், பல தரப்பட்ட விருதுகளை குவிப்பதும் ‘கொட்டுக்காளி’ பாடதிதின் வழியாகவும் ‘குரங்கு பெடல்’ படத்தின் வழியாகவும் தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]