தமிழில் ‘யுத்தம் செய்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் பலமுறை தன்னுடைய சர்ச்சைக்குரிய பேச்சால் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியும் உள்ளார்.
தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மலையாள சினிமாவின் Hema Committee Report -ன் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இன்று லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி சர்ச்சையாகியுள்ளது. News 18 செய்தி சேனலில் கொடுத்த பிரத்யேக பெட்டியில், இன்றிய தலைமுறை நடிகர்கள் இந்த மாதிரியான தவறான எண்ணத்துடன் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடந்துள்ள பாலியல் சீண்டல்
“விஜய் , அஜித்தின் தலைமுறைக்கு முன் இருந்த நடிகர்கள் இது போன்ற பாலியல் வன்முறைகளை செய்யவில்லை என வந்து சொல்ல சொலுங்க பார்க்கலாம்” என சவால் விடுத்துள்ளார். இப்போதைய நடிகர்களான “சூரியா, கார்த்தி, சிவகார்த்திகேயன், அருள்நிதி ஆகியோர் இப்படியான பாலியல் சீண்டல்கள் செய்யவில்லை என சொல்ல முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் “Consensual Relationships, அதாவது இரு தரப்பினரும் விருப்பத்துடன் ஒரு உறவில் இருப்பதை நான் கூறவில்லை, பணபலம் கொண்டு வாய்ப்பு தேடி வரும் இளம் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை தான் கூறுகிறேன்” என அவர் தெரிவித்தார்.
மலையாளம் சினிமாவை உலுக்கிய Hema Committee report – இந்தியாவின் பேசுபொருளாக மாறியது எப்படி?
Casting Couch வழி நடக்கும் பாலியல் சீண்டல்
“இப்பவும் வாய்ப்பு தேடி ஊரிலிருந்து சினிமா கனவுடன் வரும் பெங்களிடம் ‘Casting Couch’ என்ற பெயரில் பல துறைகளில் பாலியல் வன்கொடுமை நடந்துகொண்டிருக்கிறது” என லட்சுமி ராமகிருஷ்ணன் பெட்டியில் கூறினார்.
மலையாள நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் டோவினோ தாமஸ் தற்போது நடந்துவரும் Hema Committee சர்ச்சையை பற்றி பேசியதையும் சுட்டிக்காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன், இப்படியான வாதத்தை முன்வைத்தது இன்று இணையதள பேச்சாக மாறியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]