“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு ‘Lavender Neramae’ என்ற இரண்டாவது single வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பு போஸ்ட்டரை படக்குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் ஜெயம் ரவியின் 33வது திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’ இது இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் ஆகும். இதில் கதாநாயகியாக தேசிய விருது வென்ற தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்திற்கு பிறகு இன்று வரை iconic காதல் பாடல்களை அளித்து வரும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் first single ஏ.ஆர்.ரஹ்மானின் trademark எனக் கூறப்படும் நவீன இசைக்கருவிகளின் தாளங்களில் ‘Yennai Izhukkuthadi’ வெளியாகி இசை ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் காந்தக் குரலை உடைய பாடகி தீ இணைந்து பாடியுள்ளனர். YouTube-ல் தற்போது வரை 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
காதலிக்க நேரமில்லை – படக்குழு
- இயக்குனர் – கிருத்திகா உதயநிதி
- நடிகர்கள் – ஜெயம் ரவி, நித்யா மேனன், லால், யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கன், மனோ
- இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
- ஒளிப்பதிவாளர் – கவேமிக் U.அரி
- எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர்
- வெளியாகும் வருடம் – 2025
- தயாரிப்பு நிறுவனம் – Red Giant Movies