டான்ஸ் மூலம் சினிமாவில் எண்ட்ரி தந்து இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல அவரதங்களை எடுத்து சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருந்து வருகிறார் Raghava Lawrence.
சிறு வயதில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட லாரன்ஸ் பின்நாளில் டான்ஸ் மாஸ்டராக சினிமா உலகில் பல அற்புதம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனிடம் கார் கிளீனராக வேலை செய்து வந்தார். அவர் டான்ஸ் செய்வதை பார்த்த ரஜினிகாந்த் டான்ஸ் கலைஞர்கள் சங்கத்தில் சேர உதவினார். 1989-ல் டி. ராஜேந்திரன் இயக்கத்தில் சம்சார சங்கீதம் என்ற படத்தில் ஒரு பாடலில் லாரன்ஸை காட்டியிருப்பார்.

தொடர்ந்து உன்னை கொடு என்னை தருவேன், பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் அவ்வப்போது தோன்றி வந்த லாரன்ஸ் முதன் முறையாக “அற்புதம்” படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தினார் Raghava Lawrence.
டான், முனி, பாண்டி, ராஜாதி ராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். முனி படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் அடுத்த பாகம் காஞ்சனா 2, காஞ்சனா 3 என முனி சீரிஸில் பேய்ப்படம் கொண்டு எடுத்து வந்தார்.

தற்போது ஜிகித்தாண்டா டபுள் x படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அடுத்து 4,5 படங்களில் கமிட் ஆகியிருக்கும் லாரன்ஸ் பிஸியாக நடித்து வருகிறார்.
முனி, காஞ்சனா படங்களில் Raghava Lawrence பேய்க்கு பயந்ததை போல நடிப்பது, ஸ்டைல், பேய் இவரது உடம்பில் வந்த பிறகு இவர் செய்யும் சேட்டைகள், நடிப்பு போன்றவை ரசிக்கும் படியாக இருக்கும்.
சினிமா என்பதை தாண்டி பல சமூக சேவைகளை செய்து மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை பெற முடியாமல் போனதற்கு தற்போது பல குழந்தைகளுக்கு தன்னால் முடித்த உதவி செய்து வருகிறார்.
இயக்குனராக தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ஹிட் படங்களை தந்தும் மாஸ் ஹீரோவாக பல படங்களில் நடித்தும் உள்ளார். இவரது ஸ்டைலான டான்ஸ் பலரால் ரசித்து கொண்டாடப்பட்டு வருகிறது.
2000 | உன்னை கொடு என்னை தருவேன், பார்த்தேன் ரசித்தேன். |
2001 | பார்த்தாலே பரவசம் |
2002 | அற்புதம், ஸ்டைல் |
2004 | தென்றல் |
2007 | முனி |
2008 | பாண்டி |
2009 | ராஜாதி ராஜா |
2010 | இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் |
2011 | முனி 2: காஞ்சனா |
2015 | முனி 3: காஞ்சனா 2 |
2017 | மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா |
2019 | முனி 4: காஞ்சனா 3 |
2023 | ருத்ரன், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]