தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், தற்போது முன்னணி கதாநாயகனாகவும் நடித்து வரும் நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் ‘லெக் பீஸ்’ திரைப்படம். மேலும், இவருடன் இணைந்து வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி போன்ற பல முன்னணி நடிகர்களும், நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படம் இயக்குனர் ஸ்ரீ நாத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்துள்ளார்.
லெக் பீஸ் திரைப்படத்தின் முதல் பாடலாக ‘டிக்கிலா டிக்கிலா’ எனும் பாடலும் அதன் லிரிக்ஸ் விடியோவும் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரைலரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது, இப்படம் பல காமெடி நடிகர்கள் நடித்து நகைச்சுவையாக கலக்கியிருக்கும் காமெடி படம் என்று தெரிகிறது.
A comedy feast is served! 🍗😂
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) February 24, 2025
Brace yourself for unlimited fun with the trailer of #LegPiece ✌️
▶️ https://t.co/okgkpEuALH
Releasing in cinemas on March 7th pic.twitter.com/jMnCLPDmtr
இப்படத்தில் நகைச்சுவை மற்றும் நக்கல் பேச்சுக்கு எந்த வித பஞ்சமும் இல்லாத அளவிற்கு அனைத்து நகைச்சுவை நடிகர்களும் இணைத்து கலக்கிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் எந்த வித ஆக்ஷன் காட்சியும் இல்லாமல் இருக்கும் என்பது ட்ரைலர் மூலம் தெரிகிறது. மேலும், இப்படம் ஒரு கலக்கல் காமெடி என்டேர்டைன்மெண்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அசத்தலான நகைச்சுவை படமாக உருவாகியுள்ள லெக் பீஸ் திரைப்படம் மார்ச் 7 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழு.
லெக் பீஸ் படக்குழு
நடிகர்கள் | யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி. மரிமுத்து, சாம்ஸ், மதுசூதன ராவ், ஸ்ரீநாத், மணிகண்டன் |
இயக்குனர் | ஸ்ரீநாத் |
இசையமைப்பாளர் | பிஜோர்ன் சுர ராவ் |
தயாரிப்பு | ஹீரோ சினிமாஸ் – C. மணிகண்டன் |
துணை இயக்குனர் | எம்.எம். ராஜா |
வெளியீட்டு தேதி | 7 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]